Sunday, February 14, 2010

எனது நண்பர்கள் - 5: எளிமையிலும் எளிமை - ம. ரெங்கநாதன்

ரெங்கநாதன் குக்கிராமத்தில் இருந்து வந்தவர். பத்திரிகைதுறையில் எனக்கு சீனியர். எந்த மாதிரியான குணம் படைத்தவருடனும் ஒத்துப் போகக்கூடிய எளிமையான பழக்க வழக்கங்கள், பேச்சுக்களைக் கொண்டவர். திருமணத்துக்கு முன் பேச்சலர் வாழ்க்கையின்போது நாங்கள் ஒரே வீட்டில் அடைந்திருந்தோம். அலுவலகப் பணிகளுக்கு மத்தியிலும், வீட்டில் சமையல் செய்வது, ஒட்டடை அடிப்பது, துணி துவைப்பது என ஆச்சரியப்படுத்துவார்.

எவ்வளவு காரசாரமான விவாதமாக இருந்தாலும் உணர்ச்சி வசப்படாமல் சமாளிப்பதில் வல்லவர்.யார் எப்படிக் கோபப்பட்டாலும் சிரித்துக் கொண்டே தட்டிக் கழிப்பார். சென்னை நகர நெருக்கடிகளில் நான் சிக்கிக் கொண்டிருந்தபோது, என்னைத் தாங்கிப் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.


எவ்வளவு சிறிய சந்தேகமானாலும் ஜூனியர், சீனியர் வித்தியாசம் பார்க்காமல் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பாங்கை இவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொள்ள முயற்சித்தேன். கருத்துக்களை அறிந்து கொள்வதிலும் இதுபோன்ற முறையைத்தான் அவர் பின்பற்றுவார்.


இவருடன் நண்பராக இருந்து, பின்பு கருத்து வேறுபாட்டால் சண்டையிட்டுப் பிரிந்து போனதாக ஒருவரைக்கூடக் காட்ட முடியாது. எல்லா நிலைகளிலும் நண்பர்களை வைத்திருக்கும் இவரது நண்பர்கள் வட்டத்தில் எனக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதே பெருமைக்குரிய விஷயம்தான்.


புரட்சிகரமாகத் திருமணம் செய்து கொண்டிருக்கும் ரெங்கநாதன், இன்று ஊடகத்துறையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்.



நள்ளிரவுக்  கனவு, அம்பத்தூர் சினிமாக்கள், வீடு தேடும் படலம், பென்டகன் ட்ரீட் என நாங்கள் அசைபோட நிறையவே இருக்கின்றன.

அடுத்தது: ரௌத்ரம் பழகும் ஜீனியஸ்: சுப்ரமணிய பாரதி


முந்தையவை:

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்

 எனது நண்பர்கள்-4: சமூக எல்லைகளைக் கடந்தவர்- அ. செல்வதரன்


 ..
..

No comments: