1. ஒரு தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படும்போது, யாருக்குக் குறி வைக்கப்பட்டது என்ற குழப்பம் ஏற்படும். அதிகப் புகழ்பெற்றவர் யாரோ அவரே டார்கெட் என பொதுவான முடிவு பெரும்பாலும் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
2. அம்மாவின் விழுப்புரம் ஆர்ப்பாட்டமும் அவரது பேச்சும் முன்னணி தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாகச் சொல்லப்பட்டது. அதே நாளில் முதல்வரின் அறிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டது.
3. துணை முதல்வரின் புத்தக வெளியீட்டு விழா எதிரணித் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஊடகம் என்ற முறையில் முன்னணித் தொலைக்காட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
4. சாமியாருக்கு எதிரான போராட்டங்களில் வெறும் நான்கைந்து பேரே கலந்து கொண்டபோதும் க்ளோசப் டெக்னிக் மூலம் பெரிய கொந்தளிப்பு போலக் காட்டப்பட்டன. படுக்கையறை விடியோவை உன்னிப்பாகப் பார்த்த அன்பர்கள், போராட்டங்கள் தொடர்பான விடியோவையும் கவனித்தால் இது தெரியும்.
5. சம்பந்தப்பட்ட நடிகை தற்போது நெருக்கமாக இருக்கும் எதிரணித் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
6. வேறொரு பெரிய பிரச்னை எழும்போது அதிலிருந்து திசை திருப்ப இந்தமாதிரியான உத்திகளைப் பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான்.
7. ஆல்பமாக வெளியிட்ட புலனாய்வுப் பத்திரிகை கடந்த ஆண்டே சாமியாருக்கு எதிராக சில புலனாய்வுகளைச் செய்திருக்கிறது.
8. முன்னணித் தொலைக்காட்சியின் தலைவர் தேவையேயில்லாமல் திருச்சியில் நடந்த முதல்வரின் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.
9. இருபது முப்பது வயதுகளில் பாலியல் ஆசைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. சாமியார்கள் என்று கூறுவோர் அனைவருமே மனிதர்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர்களல்லர். தாய், தந்தையரையும் நலம் விரும்பிகளையும் தவிர வேறு யாரிடமும் ஆசி பெற வேண்டியதில்லை.
10. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் சில அரசியில் கட்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூரிலும் பண வசூலாகிக் கொண்டிருக்கிறது.
11. சேவை செய்வது என்பது இந்தக் காலத்தில் போலியாகத்தான் இருக்க முடியும். சாதாரண மனிதர்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடனோ அல்லது மதங்கள் கூறுவதுபோல கடவுளுக்குப் பயந்தோ நியாயமாக நடப்பதே போதுமானது. சேவைகளை அரசு பார்த்துக் கொள்ளும்.
12. இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல சொந்தக்காரர்களுக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மட்டும் உதவி செய்தாலே சமூக சேவைக்கும் மத சேவைக்கும் எந்தத் தேவையும் இருக்காது.
...
.
Wednesday, March 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நாட்டு நடப்பை தெரிஞ்சிகிட்டேன்
//சேவை செய்வது என்பது இந்தக் காலத்தில் போலியாகத்தான் இருக்க முடியும். //
200 சதவீதம் கரெக்ட்டு
நசரேயன் அண்ணா, 12 குறிப்புகளையும் கூட்டிக் கழிச்சு நாட்டு நடப்பதைத் தவரி ஏதாவது தெரியுதா பாருங்க..
அத்திரி...
ரயில் சேவை, பஸ் சேவை, தொலைபேசி சேவை, இண்டர்நெட் சேவை மாதிரி காசு வாங்கிட்டு செய்றதுதான் சேவையாயிடுச்சு...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்ப
ரொம்ப சரியா சொன்னீங்க.
Post a Comment