Saturday, November 11, 2006

சூயஸ்!, பனாமா!, சேது?










18ம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெறும் காட்சி....




















1907 ல் பனாமாக் கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெறும் காட்சி....

















கடலுக்கடியில் சேதுக்கால்வாய்?

சூயஸ், பனாமா, சேதுக் கால்வாய்கள் பற்றி விரைவில்.....

Wednesday, November 08, 2006

அமெரிக்காவின் அதிநவீன பூச்சிப் படை

இரண்டாம் உலகப் போரின் போது பூனைகளின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிவைத்து அவற்றை எதிரிகளின் கப்பலைத் தகர்க்க பயன்படுத்தினர். அதே போல் வெளவால்களின் உடம்பில் எரியக் கூடிய பொருட்களை கட்டி வைத்து அவற்றை மயக்க நிலைக்கு உட்படுத்தி எதிரிகளின் நகரங்களையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்காக பயன்படுத்தினர். வியட்நாம் போரின் போது டால்பின்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ இதனை முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.
இவற்றிற்கெல்லாம் மேலாக தற்போது அமெரிக்காவின் பென்டகன், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக் கூடிய பூச்சிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரு சிறிய மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு கூட்டுப்புழு பருவத்திலிருக்கும் பூச்சிகளின் உடம்பில் நுழைக்கப்படும் கூட்டுப்புழு, வளர்ந்து பூச்சியாக மாறும்போது இந்த மின்னணு அமைப்பு பூச்சியின் உடம்பில் ஒன்றிணைந்து விடும். அதன் பின்னர் அந்த பூச்சிகள் எங்கு பறக்க வேண்டும் என்பதை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கட்டுப்படுத்தலாம். அந்த பூச்சியின் உடம்பிலுள்ள மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு, எதிரிகளின் முகாம்களில் என்னென்ன வெடிபொருட்கள் இருக்கின்றன, எங்கெங்கு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை உடனுடக்குடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கும். இந்த திட்டம் சோதனை நிலையில் தான் இருக்கிறது என்றாலும் மிக விரைவில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குளவிகளையும், தேனீக்களையும் இதே மாதிரியானதொரு திட்டத்தி;ற்காக பயன்படுத்தி தோல்வியுற்ற அமெரிக்காவின் இந்த புதிய திட்டம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் உலகில் புதுவிதமான போர்க்களங்கள் உருவாகி மனித சமூகத்தை அச்சுறுத்தும் என்பது தான் தற்போதைய கவலை.


தென் கிழக்காசியத் திட்டங்கள்

தென் கிழக்காசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமிடப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுகின்றன. 2000ல் லாவோஸில் கையெழுத்தான மேகாங் - கங்கா திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுமாயின் அது நிச்சயமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற உதவும். வியட்நாம், மியன்மர், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவுடனான உறவு பலப்பட இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தில் சீனாவும், பங்களாதேஷீம் பங்கேற்கவில்லை.
டீஐஆளுவு - நுஊ என்று கூறப்படும் டீயபெடயனநளா ஐனெயை ஆலயnஅயச-ளுசடையமெய வுhயடையனெ நுஉழழெஅiஉ ஊழ ழிநசயவழைn திட்டத்தின் மூலமாக தெற்காசிய நாடுகளின் பொருளாதார பலம் உயர்கிறது.
ஆசிய நெடுஞ்சாலைத் திட்டம் முழுமையடையும் பொழுது சிங்கப்ப+ர் மற்றும் புதுதில்லி நேரடியாக கோலாலம்ப+ர் மற்றும் கோசிமின் நகரம், பாங்காக், டாக்கா, கல்கத்தா போன்ற நகரங்கள் வழியாக இணைக்கப்படும்.
பொதுவாக திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்பார்வையிலேயே நடைபெறுகின்றன. ஆனாலும் சிறிய கிழக்காசிய நாடுகளின் மேல் இந்தியா ஆதிக்கம் செலுத்துவது போன்ற தோற்றம் சமூக கால நடவடிக்கைகளில் தெரிகிறது. உதாரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் கோலாலம்ப+ர், ரசியான் மாநாட்டு உரை இதனை உறுதி செய்கிறது. உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளை எதிர்க்கும் அதே பிரதமர் சிறிய நாடுகளிடம் அதே கொள்கையை திணிக்க முற்படும் விதமாக தடையிலா வர்த்தகம் செய்யும் யோசனையை தெரிவிக்கிறார். இந்தியா ஒரு ஆதிக்க சக்தியல்ல என்பதை மற்ற ஆசிய நாடுகளுக்கு உணர்த்தும் கடமை இந்தியாவுக்கு உள்ளது.

மறுக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

காலம் காலமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்றில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுபார்வை செய்வதன் மூலமாக அதில் திருத்தங்களை செய்வதும் அல்லது முற்றிலுமாக மாற்றி எழுதுவதும் வரலாற்று ஆராய்ச்சிப் படிப்பின் மிக முக்கியமான பகுதிகளாகும். இதுவரையில் கிடைக்கப்பெறாத புதிய ஆவணங்களை கண்டறிவதன் மூலமாகவும் மிகத் துல்லியமான விபரங்களைச் சேகரிப்பதன் மூலமாகவும் மட்டுமே வரலாற்றில் மீள்பார்வை செய்ய முடியும். வரலாற்று ஆசிரியர் டேவிட் இர்விங் கூற்றுப்படி, "வரலாறு என்பது தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மரமாகும். ஒவ்வொரு புதிதாக கிடைக்கும் ஆவணங்களின் மூலமாகவும் வரலாறு மாறிக் கொண்டே இருக்கும்". உதாரணமாக சமீபத்தில் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உலக வரைபடத்தின் மூலமாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே சீனர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வருகிறது.
ஆனால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி ஜெர்மனியால் ஐம்பது லட்சம் ய+தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை மறுத்துப் பேசுவது பல ஐரோப்பிய நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. 1938 முதல் 1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை விஷவாயு நிரப்பப்பட்ட அறைகளில் அடைக்கப்பட்டு லட்சக்கணக்காக ய+தர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளைச் செய்வதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி செய்யப்படாத நிறைய அறைகள் கட்டப்பட்டு அதில் சிறைப்பிடிக்கப்பட்ட ய+தர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகளின் கதவுகளில் சிறிய துவாரமிடப்பட்டிருந்தது. அதன் வழியாகவே விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு அனைவரும் மொத்தம் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளின் கோரமுகம் 1941ல் தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. சிறைகளில் இருந்து தப்பிய சிலரது தெளிவான விளக்கங்களின் மூலமாகவே இந்த வரலாற்று நிகழ்வின் உண்மைத் தன்மை மேலும் அதிகரித்தது. போர் முடியும் தருவாயில் ஜெர்மனியின் சில இனப்படுகொலை முகாம்களுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் படைகள் அங்கு ஆயிரக்கணக்கான எரிக்கப்படாத பிணங்களையும், உணவில்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளித்த பலரையும் மீட்டது. அங்கு மீட்கப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இந்த பேரினப் படுகொலைகளுக்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக உள்ளது. ஆன்ஃபிராங் என்ற ய+த இளம் பெண்; தனது டைரியில், அவரும் அவரது குடும்பமும் நாசிக்களால் பட்ட இன்னல்களை விவரிக்கிறார். இந்த டைரி தான் நாஸி ஜெர்மனியின் கோரப்படுகொலைகளுக்கு மிகத் தெளிவான மற்றுமொரு ஆதாரமாகும். இந்தப் படுகொலைகள் எல்லாமே ஹிட்லரின் தலைமையில் அவருக்கு தெரிந்து, அவரது உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றில் விளக்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்திலிருந்த சில வரலாற்று ஆசிரியர்களும் சில தலைவர்களும் ஐம்பது லட்சம் பேர் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவது கட்டுக்கதை என கூறி வருகின்றனர். இவர்கள் ய+தப்படுகொலை மறுதலிப்பாளர்கள் என்று மற்றவர்களாhல் அழைக்கப்பட்டாலும்; அவர்கள் தங்களை ய+தப்படுகொலை மீள்பார்வையாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். 1979ல் வரலாற்று மீள்பார்வை கல்விமையம் உருவாக்கப்பட்டதிலிருந்து இவர்களது கருத்துக்கு ஆதரவு பெருகி வந்தது. தங்கள் கருத்துக்கு ஆதரவாக நிறைய வாதங்களை எடுத்து வைக்கும் இவர்கள் கருத்துப்படி விஷ வாயு அறைகள் என்ற ஒன்று முற்றிலும் புனையப்பட்ட கதையாகும். நாஸிக்கள் ஐம்பது முதல் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்தனர் என்பது பொறுப்பற்ற வாதம் என்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யா, இங்கிலாந்து, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று விட்டார்கள் என்பதும் இவர்கள் கருத்து. ய+தப்படுகொலை நடந்தது என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் புகைப்படங்களில் பல இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் எடுக்கப்பட்டது என்பது படச்சுருள்களை ஆய்வு செய்யும் போது தெரிய வருகிறது என்றும் கூறுகிறார்கள். அப்படங்கள் போலியானவை என்பது மட்டுமில்லாமல் அவற்றில் பசி பட்டினியால் எலும்பும் தோலுமாய் உள்ளவர்களைக் காண முடிகிறதே தவிர விஷவாயு செலுத்தப்பட்டு இறந்தவர்களாகவோ அல்லது அதற்கு ஆதாரமாகவோ ஒரு புகைப்படமும் இல்லை. மேலும் ஹிட்லர் கையெழுத்திட்ட எந்த ஆவணமும் இதுவரையில் யாராலும் கைப்பற்றப்படவில்லை. இதன்மூலம் ஹிட்லரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அவரது சகாக்கள் செய்த கொடுமைகள்தான் இந்த இனப் படுகொலைகள் என்று வாதிடுபவர்களும் உண்டு. நாசிக்கள் ஐம்பது லட்சம் பேரைக் கொன்றிருந்தால், அந்த உடல்களை எரிப்பதற்கு மிக அதிக அளவில் எரிசக்தி தேவைப்பட்டிருக்கும், அந்த அளவு எரிசக்தி ஜெர்மனியில் அப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. ய+தர்கள் மீது ஒரு பச்சாபத்தை உருவாக்கி அதன் மூலமாக பாலஸ்தீனத்தில் ய+தர்களுக்காக தனி நாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது என்றும் இவர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் மறுக்கப்படுவது இது முதன் முறையல்ல. மாவோவின் அரசால் சீனாவில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரில் மாண்டவர்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஆதாரங்களோடு நிரூபிக்கும் வரை இந்நிகழ்வு பல காலமாக மறுக்கப்பட்டு வந்தது. ஆர்மீனிய இனப் படுகொலைகளுக்கு காரணமான துருக்கி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படுகொலைகளை மறைத்து வந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே அந்நாடு தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறது. இதே போல்; போஸ்னிய செர்பியப் இனப்படுகொலைகளும், ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியப் பழங்குடி மக்களின் படுகொலைகளும் அந்தந்த தேசங்களின் அரசுகளால் முதலில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் ஆதாரங்களில் அடிப்படையில் அவை நிரூபிக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் அதிபர் முகமது அகமதின்ஜத் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ய+தப் படுகொலைகள், ய+தர்களுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சாரம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அரசுகளே இனப்படுகொலைகளை மறைக்கும் நிலைகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதையும் யூதப் படுகொலைகளை மறுதலிப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாஸி ஜெர்மனியால் நடத்தப்பட்ட ய+தப் படுகொலைகள் உலகளாவிய ஒரு மோசமான நிகழ்வாக இருப்பதால் அதனை மறுதலிப்பது என்பது பெரும்பாலும் குற்றமாகவே கருதப்படுகிறது. டேவிட் இர்விங் 1970களில் வெளியிட்ட 'ஹிட்லரின் போர்" என்ற புத்தகத்தில் ஹிட்லருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சில கருத்துக்கள் பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியது. 1989ல் ஆஸ்திரியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய டேவிட் இர்விங், ஹிட்லருக்குத் தெரியாமலேயேதான் ய+தப்படுகொலைகள் நடைபெற்றது எனவும், ஹிட்லர் மிகவும் புத்திசாலியானவர், ய+தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எனவும், யூதப்படுகொலைகள் வெறும் கட்டுக் கதை எனவும் பேசினார். இவ்வாறு நாஸிக்களின் யூதப் படுகொலைகளை மறுத்துப் பேசுவது ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற 11 நாடுகளின்; சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அப்போதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி 20ம் தேதி ஆஸ்திரியா சென்ற அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1990க்குப் பிறகு யூதப்படுகொலைகளை மறுதலித்து தான் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்று தற்போது கூறியுள்ள இர்விங், நாஸி ஜெர்மனியால் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது உண்மைதான் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முகமது நபி கார்ட்டூன் விவகாரத்தின் பேச்சுரிமை பற்றி உலகளாவிய விவாதம் நடைபெற்று வரும் வேளையில் இப்பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை உலகமே கவனித்து வருகிறது.

இடதுசாரிப் பாதையில் லத்தீன் அமெரிக்கா

தற்போது இருக்கும் லத்தீன் அமெரிக்கா முப்பது ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட மிகவும் வேறுபட்டதாகும். முன்புபோல் அல்லாமல் தற்போது தேர்தல் நடைமுறைகள் எல்லா நாடுகளிலுமே மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது எந்த ராணுவ அரசுமே பதவியில் இல்லை என்பதுதான் மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணமாகும். தேர்தல்கள் மிகவும் நடுநிலைமையுடன் நடைபெறுவது மட்டுமன்றி பத்திரிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றன என்பதே இந்த மாற்றத்திற்கு சிறந்த சான்றாகும். இங்குள்ள சமுதாயச் சூழலும் முற்றிலுமாக மாறித்தான் போய்விட்டது. நகரமயமாக்கலும், அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சியும், மொபைல்போன்கள், இணையம், டிவி சேனல்கள் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் லத்தீன் அமெரிக்காவின் சமூக மாற்றத்திற்கான காரணங்களாகும்.பொதுவுடமை எண்ணம் கொண்ட கம்ய+னிச சித்தாந்தவாதிகள் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவு பலம் பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு இல்லை.அர்ஜெண்டினா, பிரேசில், வெனிசுலா, உருகுவே போன்ற நாடுகளில் ஏற்கனவே இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளனர். தற்போது பொலிவியாவிலும், சிலியிலும் இடதுசாரி ஆட்சியாளர்கள் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மெக்ஸிகோவிலும் பெருவிலும் நடக்க இருக்கும் தேர்தலில் கூட இடதுசாரிகளுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணம் 21ம் நூற்றாண்டின் பொதுவுடமைவாதியாக வர்ணிக்கப்படும் வெனிசுலாவின் அதிபர் சாவேஸ் ஆவார். அவர் கிய+பாவின் பிடல் சாஸ்ரோவை விட பல நாடுகளில் மக்களின் செல்வாக்கு பெற்றவராக விளங்குகிறார். பொலிவியாவில் ஈவோ மாரல்ஸ் தலைமையில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றமே பொதுவுடமைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். அதன் அமெரிக்க நாடுகளிலே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான பொலிவியாவிற்கு பொதுவுடமையின் மூலம் நல்ல வளர்ச்சி ஏற்படும் என கருதப்படுகிறது. இயற்கை எரிவாயு மூலமாக இந்நாடு தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. சிலி நாட்டின் முதலாவது பெண் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மிஷல் பேக்லட் 1973ல் நடந்த ராணுவப் புரட்சியால் சித்திரவதை செய்யப்பட்டவர். மிகப்பெரும் போராளியான இவர் பொதுவுடமை தேசமாக சிலியை மாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடையவர். பெரு நாட்டின் பொதுத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் இந்த நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும். இங்கு தேர்தல் முடிவுகள் இடதுசாரி கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்ஸிகோவில் மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வெனிசுலா அதிபர் சாவேஸ்-ன் பிரசார யுக்திகள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கத்தோலிக்க சர்ச்சும், ஏகாதிபத்தியவாதிகளும் இங்கு இடதுசாரிகளுடைய வெற்றியைத் தடுக்க போராடுகின்றனர். மிகவும் நெருக்கமான பந்தயத்தில் இடதுசாரிகள் வெற்றிபெற அதிகமான வாய்ப்பிருக்கிறது. தற்போது லூலா தலைமையில் இடதுசாரி ஆட்சி நடைபெற்று வரும் பிரேசில் அக்டோபர் மாதத்தில் தேர்தலைச் சந்திக்கிறது. லூலாவின் தொழிலாளர் கட்சி பல ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. 2003 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்ற அதிருப்தியும் இக்கட்சி மீது உள்ளது. எனினும் மக்களின் ஆதரவு போதுமான அளவு இருப்பதால் மீண்டுமொரு 4 ஆண்டுகளுக்கு இக்கட்சியே இங்கும் ஆட்சி செய்யக் கூடும். வரும் அக்டோபரில் தேர்தல் நடக்க இருக்கும் ஈக்வடாரில் பணம் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். இடதுசாரியான ஒரு வேட்பாளரே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வெனிசுலாவின் தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதில் சாவேஸ் வாக்காளர்களைச் சந்திக்கிறார். இவருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருப்பதனால் ஏதாவது அதியம் நடந்தாலன்றி இவர் தேர்தலில் தோற்பார் என்பதை கற்பனை கூட செய்யக் முடியாது. மே 2006ல் தேர்தல் நடக்க இருக்கும் கொலம்பியாவில் மட்டுமே வலதுசாரி அதிபர் வர வாய்ப்பிருக்கிறது. இங்கு இடதுசாரிகள் புரட்சியாளர்களாக இருப்பதனால் அவர்களை அடக்க அமெரிக்க உதவியோடு அரசு போராடி வருகிறது. பொலிவியாவின் அதிபரும், வெனிசுலாவின் அதிபரும் இணைந்து தங்களது கொள்கைகளையும், திட்டங்களையும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்து இடதுசாரிகளுக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். இனி வரும் சில ஆண்டுகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதுமே இடதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது உறுதியாகி விட்டது. இந்த மாற்றம் உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அமெரிக்கா சற்று எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறது. சில நாடுகள், இடதுசாரிகளாக இருந்தாலும் கூட, அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா பலவிதமான கடனுதவிகளை அளிப்பதோடு, தடையிலா வர்த்தகமும் செய்கிறது. இந்த நாடுகள் இடதுசாரித் தலைவர்களைக் கொண்டிருந்தாலும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கின்றன. எனினும் பொலிவியாவும், வெனிசுலாவும் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. ஏற்கனவே கோகா பயிரிடுவது சட்டப+ர்வமாக்கப்படும் என அறிவித்து பொலிவியா தனது அமெரிக்க எதிர்ப்பை காட்டியது.ஆனால் தற்போது பதவியிலிருக்கும் அல்லது வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் எல்லா இடதுசாரி ஆட்சியாளர்களும் ஒரே மாதிரியான கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்டவர்களாக கருத முடியாது. பிரேசிலிலும் அர்ஜெண்டினாவிலும் உள்ள இடதுசாரி ஆட்சியாளர்கள், சாவேஸ் போன்று மிகத் தீவிரமான பொதுவுடமைவாதிகளாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் செயல்படுகிறார்கள். புதிதாக பதவியேற்கும் இடதுசாரிகள் முதலில் சமாளிக்க வேண்டியது அமெரிக்க அரசின் நேரடி மற்றும் மறைமுகமான நெருக்கடிகளைத்தான். அது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் பல பிரச்சனைகள் உள்ளன. சமூக கலவரங்களும், ஆள் கடத்தலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக பிரேசிலில் ஒரு நாளைக்கு 100 துப்பாக்கிச் சூடு இறப்புகள் நடக்கின்றன. போதை மருந்து கடத்தல் மிகப்பரவலாக நடைபெறுவது தேசங்களின் சமூக நலனைப் பாதி;க்கின்றன. பெண்ணுரிமை மறுக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 55 கோடியில் சுமார் 22 கோடி பேர் இன்னமும் வறுமையில் வாழ்கிறார்கள். மேலும் 10 கோடி பேர் தினமும் ஒரு டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் தனி நபர் வருமானம் தொடர்ந்து எந்த வித அதிகரிப்பும் இல்லாமல் நிலையாகவே இருந்து வருகிறது. உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதத்தில் இது மிகவும் குறைவானதாகும். வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமான அளவில் காணப்படும் பகுதியாக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐ.நா.வின் 2005 வளர்ச்சி அறிக்கை கூறியுள்ளது. பிரேசிலின் சமூக ஏற்றத்தாழ்வுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். எண்ணை வளம் மிக்க வெனிசுலாவின் பெட்ரோலிய ஏற்றுமதியில் மிகப்பெருமளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிய+பாவிற்கு குறைந்த விலையில் பெட்ரோலியம் விற்கப்படுகிறது. சாவேஸ் தனது செல்வாக்கையும், பொதுவுடமைக் கருத்துக்களையும் நிலைநிறுத்துவதற்காக பெட்ரோலிய ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் மிகப்பெருமளவு பணத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளில் செலவு செய்கிறார். எனினும் ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி லத்தீன் அமெரிக்கா முழுவதும் சிவப்புக்கொடி எவ்வளவு நாள் பறக்கும் என்பதை புதிய ஆட்சியாளர்களின் திறமையான ஆட்சி தான் முடிவு செய்யும்.

மியான்மரில் மனித உரிமை மீறல்கள்

மியான்மரின் மனித உரிமை மீறல்கள்
உலகில் மிக அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் நமது அண்டை நாடான மியான்மரும் ஒன்று. 1962ல் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து ஆண்டுகளாக பொது மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதிலேயே அந்த நாட்டின் ராணுவ அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1962ல் இருந்து ராணுவ வழிகாட்டலின்படி பர்மா பொதுவுடைமை திட்டக் கட்சி 26 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒருமுறை கூட சுதந்திரமாக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் மட்டுமில்லாமல் தனி மனிதனின் கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் நசுக்கப்பட்டது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணுவ ஆட்சிக்கு, எதிராக கிளர்ந்து எழுந்த சில புரட்சி இயக்கங்களும் மாணவ அமைப்புகளும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. இராணுவ அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். நாட்டில் பாரம்பரியம் மிக்க சமூக அமைப்பினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசுக்கு எதிராக கொரில்லாப் போர் முறையை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இவை எதுவுமே ராணுவ ஆதரவு அரசின் கொள்கைப் போக்கை மாற்றப் பயன்படவில்லை.
1988ம் ஆண்டின் மத்தியில் மியான்மர் முழுவதிலும் ஏற்பட்ட உணவுப் பொருள் பற்றாக்குறையின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் 8.8.88ல், ரங்கூன் நகரில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கோஷங்களாக எழுப்பிய படி ஆயிரக்கணக்கான மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சென்ற மிகப்பிரமாண்டமான ஊர்வலத்தை நோக்கி போலீஸ் சரமாரியாக சுட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். அதன் பின்னரும் பல கிராமங்களும் நகரங்களும் மக்களே வசிக்க முடியாத அளவுக்கு தரைமட்டமாக்கப்பட்டதாக உலக மனித உரிமைக் கழகம் கூறுகிறது. இந்தத் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது சேதம் பற்றிய சரியான விபரமோ இன்றளவிலும் வெளி உலகிற்கு தெரியாது. 1989ல் உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக 485 உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல்கள் நடத்த ராணுவ அரசு சம்மதித்தது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி சித்திரவதை செய்யப்பட்டார்கள். பல அரசியல் தலைவர்கள் மோசமான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தலில், மியான்மரின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான ஆங் சான் சூ கீ தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சிக்கும் ராணுவ ஆதரவோடு செயல்பட்ட தேசிய ஒருமைப்பாடு ஆட்சிக்கும், சில சமூகக் கட்சிகளின் கூட்டணிக்கும் மும்முனைப்போட்டி இருந்தது. தேர்தலில் ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக கட்சி மொத்தமுள்ள 485 இடங்களில் 392 இடங்களைக் கைப்பற்றியது. சிறு கட்சிகள் 65 இடங்களைக் கைப்பற்றியது. இராணுவ ஆதரவு தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வெறும் பத்து இடங்களைத்தான் கைப்பற்றியது.
மிக மோசமாகத் தோல்வியடைந்த பிறகும் ராணுவ அதிகாரிகள் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தேர்தல் விதிமுறைகளையே மாற்றியமைத்தனர். அதாவது தேர்தல்கள் நடைபெற்றது. பாராளுமன்றத்திற்கு அல்ல எனவும், அரசியல் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஒரு குழுவை தேர்ந்தெடுக்கவே தேர்தல்கள் நடத்தப்பட்டன எனவும் கூறினர்.
இதன் பிறகு, ஆங் சான் சூ கியின் ஆதரவாளர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். இதன் காரணமாக சூ கியின் ஆட்சியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விலகினர். 1995 வரை சூ கியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டடிருந்தார். சூ கீ 1995ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றதனால் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2001ல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இன்று வரையிலும் அவரைக் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக ஓர் மிக மோசமான மனித உரிமை மீறல் நடந்து வருகிறது.
மேலும் மியான்மர் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தலைமையினால் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் சோதனை செய்யப்படாமலேயே இருக்கின்றன. இதனால் மிக அதிக அளவில் எய்ட்ஸ் போன்ற நோய் தாக்கப்பட்டோர் அங்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ராணுவ அரசின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக இடம் பெயர்ந்தோர் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பாமலேயே நாடோடிகளாக அலைகின்றனர். சில சமூகத்தினர் மீது நிலம் வாங்க முடியாதபடி தடைச்சட்டம் அமுலில் இருப்பதால் சொந்தமாக வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. சிறு கூலியைப் பெற்றுக்கொண்டு மிக அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் உள்ளனர். இவற்றிற்கெல்லாம் மேலாக மியான்மர் ராணுவத்தில் குழந்தைகளும் சேர்க்கப்படுகிறார்கள் என்ற உண்மையே, அங்கு எவ்வளவு தூரம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஐந்து கோடி மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டிற்கு ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் தேவையா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது. ராணுவத்தினரால் செய்யப்படும் பாலியல் பலாத்காரங்களால் மியான்மர் முழுவதிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. எனவே இப்பிரச்சனை மியான்மரின் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் நெருக்கடி, மக்களின் இடம்பெயர்வு, எய்ட்ஸ் பரவுதல் போன்ற உலகளாவிய பிரச்சனையும் கூட.
இவ்வளவு மனித உரிமை மீறல்களையும் செய்கின்ற ஓர் அரசு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருப்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார உதவிகள் ஓர் முக்கியமான காரணமாகும். அதிலும் குறிப்பாக சீனாவும், இந்தியாவும் செய்து வரும் நிபந்தனையற்ற உதவிகளால் தான் மியான்மரின் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்ற கருத்து உலக நாடுகளிடையே உள்ளது.
உலக நாடுகளின் தலையீட்டால் மியான்மரின் மனித உரிமை மீறல் பிரச்சனை முதன் முறையாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் விவாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு சபையில் பிலிப்பைன்ஸ் தவிர எந்த நாடும் மியான்மர் அரசுக்கு ஆதரவாக இருக்காது என்று கருதப்படுகிறது. ஒரு வேளை சீனா மியான்மர் அரசை ஆதரித்தால் அது உலக நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆசியாவில் தன்னை ஒரு சிறந்த சக்தியாகக் காட்டி கொள்ள நினைக்கும் சீனா, மியான்மருக்கு ஆதரவளிக்காது எனவும் கூறப்படுகிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை மியான்மர் பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிச்சயமாக மியான்மரின் ராணுவத் தலைமைக்கு எதிரானதாகவே அமையும் என நம்பப்படுகிறது.
மியான்மரில் ஜனநாயக நம்பிக்கை துளிர்த்திருக்கும் இந்த சூழலில், இந்தியக் குடியரசுத் தலைவர் கலாமின் மியான்மர் பயணம் அந்த நாட்டின் ராணுவத் தலைமைக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவது போன்ற தோற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஏற்கனவே மியான்மரின் ராணுவ அரசோடு இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. இவ்வளவு நெருக்கடியான நேரத்தில் மேலும் மூன்று ஒப்பந்தங்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டிருப்பது மியான்மர் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல் அல்ல. இந்தப் பயணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கும் படி குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்ட போதும் கூட அரசியல் நெருக்கடி காரணமாகவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும், மியான்மரின் ஆட்சியாளர்களுக்கும் நன்மையைத் தருகிறதோ இல்லையோ, மியான்மரின் ஜனநாயக தலைவர்களுக்கும், மக்களுக்கும் துரதிருஷ்டவசமானதுதான்.

மலை போல் குவியும் மின்கழிவுகள்

நாம் பயன்படுத்த இயலாத அல்லது நமக்கு உபயோகமில்லாத பழைய மின்சாதனப் பொருட்கள் மின்கழிவுகள் எனலாம். இவற்றில் பல நச்சுத் தன்மையுடைய பாகங்கள் இருக்கின்றன என்பதனால் மற்ற பொருட்களைக் காட்டிலும் மின்கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லாம் நமது மின்சாதனப் பொருட்களின் பாகங்கள் மாற்றப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் மாற்றப்பட்ட பழைய பாகங்கள் எங்கே போகின்றன என்பதைப்பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கம்ப்ய+ட்டர்கள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் மொபைல் போன்கள் போன்றவை மூலமாகவே மின்கழிவுகள் அதிகமாக உருவாகின்றன. மின்கழிவுகளில் ஒருபகுதி மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வளர்ந்த நாடுகளில் உருவாகும் மின்கழிவுகள் வளரும் நாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் வளரும் நாடுகளில் மின்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட கம்ய+ட்டர்களும் அச்சுப் பொறிகளும் நைஜீரியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சாரா அமைப்புகளுக்கும் நன்கொடையாகத் தரப்படுகின்றன. உண்மையில் இதன் உள்ளார்ந்த நோக்கம் என்னவெனில், அமெரிக்காவின் மின்கழிவுப் பொருட்களை வளரும் நாடுகளுக்கு அனுப்புவதுதான்.
உபயோகித்த பொருளை மீண்டும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உண்மையான வேண்டுகோள். ஆனால் இதே காரணத்தைக் காட்டி வளாந்த நாடுகள் சட்டத்திற்குப் புறம்பாக தங்களது நாட்டு கழிவுகளை வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைத்து மிகப் பெரும் மோசடி செய்து வருகின்றன.
மின்கழிவுகளில் ஒரு பகுதி மறுசுழற்சிக்கு உகந்ததாக இருந்தாலும் பெரும்பகுதி நச்சுத்தன்மை மிக்கதாகவே உள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக புதிய மின்சாதனப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்கள் பழைய சாதனங்களை சரி செய்து பயன்படுத்துவதைவிட புதிய பொருட்களை வாங்குவதையே விரும்புகின்றனர். இதனால் மின்கழிவுகள் அதிகமாகி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் இருந்த போதிலும் முறையான சட்டமோ, விழிப்புணர்வோ இல்லாததால் பிரச்சனையின் தன்மை வீரியமிக்கதாய் உள்ளது.
அமெரிக்காவில் உருவாகும் எண்பது சதவீத மின்கழிவுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் பெங்களுர் பகுதியிலும் சீனாவில் கிய+ பகுதியிலும் மின்கழிவுகள் மறுசுழற்சி செய்து தரும் நிறுவனங்கள் உள்ளன. மறுசுழற்சி செய்ய இயலாத சில நச்சுத்தன்மை மிக்க பொருட்கள் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற பொருட்கள் மிகவும் நச்சுத் தன்மையுடையனவாகும்.
மின்கழிவுகளை மறுசுழற்சி செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், மின்சுற்று அட்டைகளில் நூற்றுக்கும் அதிகமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றில் சில பொருட்களை மட்டுமே மறுசுழற்சி செய்ய இயலும். பொதுவாக மின்சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் கூட ஹேலஜன்கள் பயன்படுத்தப்படுவதால் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த இயலாது. மறுசுழற்சியாளர்கள், மின்சாதனங்களில் உள்ள சில மதிப்பு மிக்க தங்கம் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு சுற்றுச் சூழல் சீர்கேட்டைத் தரும் சில பொருட்களை குப்பையில் போடுகின்றனர்.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள சில மறுசுழற்சி செய்வோருக்கு இது வயிற்றுப் பிழைப்பாக இருப்பதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தைப் பற்றியோ அல்லது சுற்றுச்சூழலைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. தங்கம் போன்ற வலுவான உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்காக வீரியமிக்க அமிலங்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். காற்றோட்டமில்லாத சூழலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகமூடியோ கையுறைகளோ அணிந்து கொள்ளாமல் வேலை செய்வதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் வேதிப் பொருட்களால் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மறுசுழற்சி செய்யும் பகுதிகளுக்கு வரும் மின் கழிவுகள் பெரும்பாலும் "நன்கொடைகள்" என்ற பெயரிலோ அல்லது "மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்கள்" என்ற பெயரிலோ வளர்ந்த நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும். இவற்றில் சில பொருட்கள் கப்பலில் வரும் வழியிலேயே சட்டவிரோதமாக நடுக்கடலில் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்தியாவிலும், சீனாவிலும் பயன்படுத்த முடியாத மின்கழிவுகள் ஆறுகளிலும் நிலங்களிலும், கடலிலும் கொட்டப்படுகின்றன.
மறுசுழற்சி செய்தது போக மீதமுள்ள மின்கழிவுகளை தனது எல்லையோர நாடுகளில் கொட்டுவதாக சீனாவின் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டை இவ்வளவு காலமும் மறுத்து வந்த சீனா, தற்போது அதனை ஒப்புக் கொள்வதோடு மின்கழிவுகளை அப்புறப்படுத்த மாற்று வழி தேடுவதாகவும் அறிவித்துள்ளது.
சில நாடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனை செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்பொருட்கள் பழுதடைந்தவுடன் தாங்களே திரும்ப எடுத்துக் கொள்ளவும் செய்கின்றன. 1991ல் சுவிட்சர்லாந்து குளிர்சாதனப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று முதன் முதலாக இந்த ஏற்பாட்டைச் செய்தது. அதன் பின்னர் ஐரோப்பியக் கூட்டமைப்பிலும், அமெரிக்காவிலும் உள்ள சில நிறுவனங்கள் இதனை செயல்படுத்தி வருகின்றன. மின்கழிவுகளை திரும்ப எடுத்துக் கொள்வதற்காக இந்நிறுவனங்கள் பொருட்களை விற்கும் போதே விலையோடு சேர்த்து கட்டணம் வசூலித்து விடுகின்றன. இந்த ஏற்பாடுகளையும் தாண்டி மின்கழிவுகள் அதிகமாகிப் போவதால் அவற்றை வளரும் நாடுகளில் கொட்டி விடுவதற்கு வளர்ந்த நாடுகள் பல வழிகளைப் பின்பற்றுகின்றன. இது போன்ற நச்சுத்தன்மை மிக்க கழிவுகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதை "பேசல் ஒப்பந்தம்" தடை செய்கிறது. 166 நாடுகள் இதில் கையெழுத்திட்டிருந்தாலும் அமெரிக்கா, இதனை உறுதிப்படுத்த வில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி மின் கழிவுகள் உட்பட எந்த ஒரு நச்சுக்கழிவுகளும் அண்டார்டிகா தவிர வேறெங்கும் ஏற்றுமதி செய்யப்படக்கூடாது. ஆனால் இந்த ஒப்பந்தம் கூட மற்ற கழிவுப் பொருட்களுக்கு சரியாக இருந்தாலும் மின் கழிவுகள் விஷயத்தில் இந்த ஒப்பந்தம் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நவீன மயமாக்கல் என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நுழைந்துவிடும் பன்னாட்டு மென்பொருள், மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உருவாகும் மின்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. கோடி கோடியாக பணம்; வருமானம் ஈட்டும் இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கால் சென்டர்கள் போன்றவை ஒன்றிணைந்து கடந்த ஆண்டில் ஒரு சிறிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியதோடு இப்பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டன. கிரீன் பீஸ் போன்ற அரசுசாரா அமைப்புகள் இந்தியாவில் இருந்தபோதிலும் மின் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது துரதிருஷ்டவசமானது. இதே நிலை நீடிக்குமானால் சில ஆண்டுகளில் இந்தியாவில் பெங்களுர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் நச்சுத்தன்மை மிகுந்த நகரங்களாக மாறிவிடும்.

ஈரானின் அணு ஆயுத உரிமை

"அணு சக்தி என்பது எங்களது தேசத்தின் கடைசி சொட்டு இரத்தம் வரை கலந்துவிட்ட உரிமை என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்." இது கடந்த டிசம்பரில் மக்களால் ஈரான் மிகவும் மதிக்கப்படக்கூடிய மதத் தலைவரான அகமது கடாமி தொழுகைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களின் முன்னிலையில் பேசியது. சர்வதேச அணுசக்தி அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும் ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சியை நிறுத்தி விடும்படி கூறியதற்காக ஈரான் தரப்பில் இருந்து வந்த பதில் தான் இது. 1967ல் இருந்து ஈரான் அணுசக்தி உலைகளை அமைத்து அதன் மூலமாக மின்சார தேவையை ப+ர்த்தி செய்து வருகிறது. 1968ல் அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எந்தவிதமான பிரச்சனைகளையும் சந்திக்காத ஈரானின் அணுசக்தி துறை 2002ம் ஆண்டு அணு சக்தியை அணு ஆயுதம் தயாரிப்பதற்காக பயன்படுத்துவதாக உலக நாடுகளால் சந்தேகிக்கப்பட்டது. ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவும் குற்றம் சாட்டியது. எனினும் ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என பலவிதமான சோதனைகளுக்குப்பின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் நவம்பர் 2003ல் அறிவித்தது. ஆனால் ஒரு வருடம் கழித்து தனது நிலையை மாற்றி ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பிற்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்தது. மேலும் அணு ஆயுத சோதனையாளர்கள் சில இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என ஈரான் மேல் குற்றம் சாட்டியது. 1968ல் இஸ்ரேலும் 1974ல் இந்தியாவும் 1998ல் பாகிஸ்தானும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை மீறி அணு ஆயுதங்கள் தயாரித்தன. இதில் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை எந்த நாடும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. நெல்சன் மண்டேலாவின் ஆட்சியில் தென்னாப்பிரிக்காவும் அணு ஆயுத நாடாக மாறியது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையானது பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஏனெனில் அங்கு மிகவும் ரகசியத்தன்மை மிக்க ஆட்சி நடைபெறுகிறது. பாகிஸ்தானிடமிருக்கும் அணு ஆயுதங்கள் மிகவும் அபாயகரமானது. ஏனெனில், அங்கு ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்போதடல்லாமல் அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாலிபான்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர்களாவர். தற்போது இதே போன்றதொரு கண்ணோட்டத்தில் தான் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சியும் விமர்சிக்கப்படுகிறது. ஈரான் தரப்பு வாதங்களை எடுத்துப் பார்த்தோமேயானால் சில காரணங்கள் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 20 வருடங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும் மக்கள் தொகைக்கு போதுமான அளவு அடிப்படை வசதிகள் செய்து தர அணுசக்தி மிகவும் அவசியமாகிறது. மேலும் ஈரானில் பெருமளவு கிடைக்கும் பெட்ரோலியம் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை விட அணுசக்தி மிக எளிதான ஒன்றாகும். அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தின் விதி 4ல் கூறப்பட்டுள்ளது போல நல்ல நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்தலாம் என்பதையும் ஈரான் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் ஈரானுக்கு அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என அமெரிக்கா கூறுகிறது. ஏனெனில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது பெட்ரோலியத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காட்டிலும் மிகவும் செலவு அதிகமானதாகும். மேலும் இரசாயன ஆயுதங்கள் ஈரானில் அதிகமான அளவில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈரான் - ஈராக் போரின் போது ஈரான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது பின்னர் கண்டறியப்பட்டது. தற்போதும் கூட, உடம்பில் கொப்புளங்களை உருவாக்கக் கூடிய, இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு செல்களை அழிக்கக் கூடிய, நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய பல வகையான இரசாயன ஆயுதங்கள் ஈரானிடம் உள்ளன. இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை சீனா ஈரானுக்கு வழங்குகிறது. ஈரானில் தயாராகும் இரசாயன ஆயுதங்கள் லிபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையால், ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சி மிக முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. ஆகவேதான் உலக நாடுகள் பல, ஈரான் தனது அணு சக்தியை அணு ஆயுதங்கள் தயாரிப்பிலிருந்து தனித்து பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை கொடுக்கின்றன. ஏனெனில் ஈரானில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட வகையான அணுசக்தி உலைகள், மின்சாரம் தயாரிப்பிற்கும், அதே நேரத்தில் அணுஆயுதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்த முடியும். இதே போன்றதொரு யுக்தியைப் பயன்படுத்தித்தான் இந்தியா அணுஆயுதங்களைத் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் அணுஆயுத நாடாக மாறிவிட்டால் அது மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும். அது மட்டுமில்லாமல் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், ஒரு போரைத் துவக்குவதற்கு அதிக முகாந்திரம் உள்ள நாடு என ஈரான் கருதப்படுவதால் இஸ்ரேலை விட ஈரானின் அணு ஆயுதமே மத்திய கிழக்குப் பகுதியில் மிகப்பெரும் ஆபத்தாகும். ஈரானின் புதிய அதிபரான மக்மூத் அகமதின்ஜக், "இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழித்து விடுவோம் " என ஏற்கனவே மிரட்டியுள்ளார். ஈரானின் அணு ஆயுதப் பிரச்சனை ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டால் யுரேனியத்திற்கு செறிவ+ட்டும் பணியை முன்பை விட மிக அதிகமாக செய்யப்போவதாகவும் அவர் தற்போது கூறியுள்ளார். ஈரானின் ஆட்சியாளர்களின் பார்வையில் உலகத்திலுள்ள அணு ஆயுதங்கள் அனைத்துமே முஸ்லிம் தேசங்களுக்கு எதிராகவே ஒரு எச்சரிக்கும் கருவியாக பயன்பட்டு வருகிறது. எப்படி இருப்பினும் அணுஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படாதவரை மத்திய கிழக்கில் அமைதி திரும்புவது கேள்விக்குறிதான்.

கார்பன் வெளியீடூ, சுற்றுச்சூழல் சீர்கேடு

சுற்றுச்சூழல் பிரச்சனையில் மிகப்பெரிய அங்கம் வகிப்பது கார்பன் வெளியீடுதான். கார்பன் வெளியீடு அதிகமாகும் போது சுற்றுச்சூழல் பாதிப்படைவது அதிகமாகும். இந்தியா கார்பன் வெளியீட்டில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகள் இந்தியாவை விட அதிக கார்பன் வெளியீட்டு அளவினைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ய+னியனில் இருந்து திட்டங்களைப் பெற்று இந்திய அரசு கிரீன் ஹெளஸ் வாயுக்களையும் கார்பன் வெளியீட்டையும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் கார்பன் வெளியீடு அதிகமாவதற்கு காரணம் நிலக்கரியின் பயன்பாடுதான். தரம் குறைந்த நிலக்கரிகளை அதிகத் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதால் அதிகக் குறைந்த சக்தி பெற அதிக அளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டு அதனால் கார்பன் வெளியீடு அதிகமாகிறது. இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியீடு 0.25 மெட்ரிக் டன்களாகும். இது உலக சராசரியில் கால் பங்கு குறைவுதான். அமெரிக்க அளவினை விட 22 பங்கு குறைவானதாகும். ஆனால் நகரமயமாதல், வாகன அதிகரிப்பு, தொடர்ந்த தரமற்ற நிலக்கரிகளைப் பயன்படுத்துவது போன்ற காரணங்கள் இந்தியாவின் தனி நபர் கார்பன் வெளியீடு மிக வேகமாக அதிகரிக்கக் கூடும். இது 2020ல் மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகமான மக்கள் தொகையின் காரணமாக மிக அதிகமான மின்சாரத் தேவை ஏற்படுகிறது. இதுவே கார்பன் வெளியீட்டிற்கும் அதன் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் காரணமாக அமைகிறது.

கோகா - மருந்தா? போதையா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய சில லத்தீன் அமெரிக்க நாடுகள் கோகா பயிரிடுவதையை மிகவும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளன. அங்கு விவசாயமே கோகா பயிரிடுவதுதான். பண்டைய காலத்தில், கோகா இலைகள் சமயச் சடங்குகளுக்காகவும், மருந்தாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன. தற்போதும் கூட நரம்பு சம்பந்தமான சில நோய்களுக்கு சிறந்த மருந்துகள் கோகா இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கொகைன் என்ற போதைபொருள் தயாரிப்பிற்கு கோகா இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரு, பொலிவியா, கொலம்பியா ஆகிய தேசங்கள் இந்த மிக மோசமான போதைபொருள் உற்பத்திக்காக கோகாவை பயிரிடுகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு கோகா பெருவில் உருவாகிறது. மீதி பொலிவியாவிலும் கொலம்பியாவிலும் தயாராகின்றன. போதைபொருள் தயாரிப்பு என்பது தனிமனித ஒழுக்கத்தை மட்டுமில்லாமல் ஒரு தேசநலனையே பாதிக்கும் என்பதற்கு மேற்கூறிய மூன்று தேசங்களுமே உதாரணமாகும். கோகாவை பயிரிடுவதற்கு மிக மோசமான ரசாயன உரங்களும் ப+ச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ப+ஞ்சைக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதால் அங்கு சுற்றுச்சூழல் பிரச்சனை உருவாகிறது. மேலும் கிராமங்களில் வாழும் விவசாயிகள் அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக மிகவும் தவறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நுட்பங்களை கையாளுகின்றனர். அமெரிக்கா அரசு கொகைன் தடுப்பிற்காக பெரு மற்றும் பொலிவியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சமூகத்தில் கிய+பாவில் பேட்டியளித்த பொலிவியாவின் புதிய அதிபர் கோகா உற்பத்தி செய்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். கோகா இலைகள் பொருளாதார, சுற்றுச்சூழலில் பிரச்சனை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அரசியல் ரீதியிலும் மிக மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. பெருவிலும், பொலிவியாவிலும் பல ராணுவப் புரட்சிக்கு கோகாவே காரணமாகும். தற்போதும் கூட அமெரிக்காவின் உதவியோடு பொலிவியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

உலகை உலுக்கிய கார்ட்டூன்கள்

பிப்ரவரி 3ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னாப்பிரிக்காவின் ஜெகன்னஸ்பர்க் உயர்நீதிமன்றம் அவசர உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ, சில குறிப்பிட்ட கார்ட்டூன்களை எந்த ஒரு வடிவத்திலும் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தென்னாப்பிரிக்க தேசிய பத்திரிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் நீதிமன்ற குறுக்கீட்டை எதிர்த்தாலும் தாங்கள் அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டனர். தற்போதைய சூழலில் அந்த கார்ட்டூன்களை வெளியிடுவது தேசப் பாதுகாப்பிற்கும், உள்நாட்டு அமைதிக்கும் ஊறுவிளைக்கும் செயல் என தென்னாப்பிரிக்கா தீர்மானித்து விட்டது. உலகின் எந்தப்பத்திரிக்கையும் தற்போது வெளியிட முன்வராத அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன் முகமதுநபியை சித்தரித்து வரையப்பட்டதாகும். தங்களை வருத்தப்பட வைக்கும் ஒரு செயலுக்காக சட்டப+ர்வமான ஒரு தடையை வாங்கிய தென்னாப்பிரிக்க முஸ்லிம் அமைப்பும் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்த பத்திரிக்கைகளும் உண்மையில் அந்நாட்டிற்கு மிகப்பெரும் நன்மையை செய்துவிட்டன என்றே கருதலாம்.
கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜிலான்ட்ஸ் - போஸன் என்ற செய்தித்தாளில் முகமதுநபியை சித்தரித்து பன்னிரண்டு கார்ட்டூன்கள் வரையப்பட்டன. இதுவே இந்தப் பிரச்சனையின் தொடக்கம். தொடர்ந்து அந்தக் கார்ட்டூன்களில் சில ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும், நிய+சிலாந்திலும், ஜோர்டனிலும் சில பத்திரிக்கைகள் மறுப்பதிப்பு செய்யவே பிரச்சனை ப+தாகரமானது. உலகின் முஸ்லீம் நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் கார்ட்டூனை வெளியிட்ட செய்தித்தாளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டென்மார்க் அரசைக் கேட்டுக் கொண்டன. ஆனால் பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பதனால் டென்மார்க் அரசால் கார்ட்டூனை வெளியிட்ட ஜிலான்ட்ஸ் - போஸன் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சவ+தி அரேபியா, குவைத் போன்ற அரபி பேசும் நாடுகளில் டென்மார்க் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஐ.நா.வில் டென்மார்க் மேல் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டன. ஆனால் கார்ட்டூன் வெளியிட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது மீண்டும் அதைப் பிரசுரம் செய்யாமல் தடுக்கவோ டென்மார்க்கின் அரசியல் சட்டத்தில் இடமில்லை எனக் கூறி டென்மார்க் அரசு எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் சில முஸ்லிம் அமைப்புகள் டென்மார்க் தண்டனைச் சட்டம் பிரிவு 140 மற்றும் 266பி ஆகியவற்றின்படி ஜிலான்ட்ஸ் - போஸன் தண்டனைக்குரிய குற்றம் செய்திருப்பதாக டென்மார்க் போலிஸில் புகார் தெரிவித்திருக்கின்றன. பிரிவு 140ன் படி எவரையும் அவர் சார்ந்திருக்கும் மதம் சம்மந்தமான மறுக்க முடியாத கொள்கைகளை களங்கப்படுத்துவதன் மூலமாக மனம் வருந்தச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு 266பி-ன் படி எவரையும் அவரது மதம் சார்ந்து மிரட்டுவதும், மனம் வருந்தச் செய்வதும், மரியாதைக் குறைவாக நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை இறுதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி கார்ட்டூன்களை வெளியிட்டதனை குற்றம் என எடுத்துக் கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் கார்ட்டூன் வெளியிடப்பட்ட விவகாரத்தை குற்றம் எனத் தீர்மானிக்கும் போது பேச்சுரிமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது.
டென்மார்க் 1849ல் ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து பேச்சுரிமை அதன் அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமையாக வழங்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த உரிமை எந்தக் காரணத்திற்காகவும் மறுக்கப்பட்டதில்லை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது. டென்மார்க் அரசியல் சட்டப்பிரிவு 77ன்படி எந்தக் குடிமகனும் தன்னுடைய கருத்துக்களை பதிப்பிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. தணிக்கையோ அல்லது வேறு எந்த தடுப்பு அளவுகோலோ இது வரையில் டென்மார்க்கில் நிறுவப்படவில்லை. 1938க்கு பிறகு டென்மார்க் அரசியல் சட்டம் பிரிவு 140, இது வரையில் பயன்படுத்தப்பட வில்லை. 1984ல் ஏசுகிறிஸ்துவை சித்தரித்து இரயில் நிலையங்களில் படங்கள் வரையப்பட்டன. 1992ல் ஏசு கிறிஸ்துவை தவறான தொடர்புடையவராக சித்தரித்து ஒரு திரைப்படம் வெளியானது. இவை எதுவுமே அங்கு தண்டனைக்குள்ளாக வில்லை என்பது தான் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.
எப்படியிருப்பினும் உலகம் முழுவதிலிருக்கும் ஒரு மதத்தின் முக்கியமான நம்பிக்கையை கேலி செய்யும் விதமாக கார்ட்டூன்கள் வரையப்பட்டதால் இப்போது பிரச்சனை சட்டத்தின் எல்லைகளைத் தாண்டிவிட்டது. டென்மார்க் அரசு மற்றும் ஜிலான்டஸ் - போஸன் ஆகியவற்றின் நடவடிக்கையில் திருப்தியடையாத சில இஸ்லாம் அமைப்புகளின் போராட்டங்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இதுவரையில் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. பிப்ரவரி 4ம் தேதி சிரியாவில் இருக்கும் டென்மார்க் மற்றும் நார்வே நாட்டு தூதரகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டன. ஆப்கனிலும் ஏமனிலும் நடந்த வன்முறையில் சிலர் இறந்தனர். பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளுக்கான தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டன. டென்மார்க் பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் சில நாடுகள் அதிகாhரப்பூர்வமான தடைகளை விதித்திருக்கின்றன. ஈரான் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய் டென்மார்க்குடன் கொண்டிருந்த எல்லா வர்த்தக உறவுகளையும் பிப்ரவரி 6 முதல் துண்டித்துக் கொள்வதாக அறிவித்து விட்டது.
சில முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தையோ அல்லது முகமது நபியையோ நிந்தனை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதை சட்டமாகக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானில் இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகள் மதத்தை அவதூறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பதிலிருந்து தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் அந்நாடுகளின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பல கிறிஸ்துவ அடிப்படைவாத அமைப்புகள் நிறைந்த நாடுகளிலும் கூட மத நிந்தனைத் தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக நார்வே நாட்டில் மத நிந்தனைச் சட்டங்கள் தெளிவாக உள்ளன. இருப்பினும் கடைசியாக அச்சட்டம் 1933ல்தான் பயன்படுத்தப்பட்டது.
உலகின் பல இடங்களில் உள்ள முஸ்லிம்கள், கார்ட்டூன்களை வெளியிட்ட பத்திரிக்கைகளின் மேல் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை ஈமெயில் மூலமாகவோ, பத்திரிக்கைகள் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உலகிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் தங்களது எதிர்ப்பை மிகவும் சாத்வீகமான முறையில் தெரிவித்து வருகிறார்கள் என்பதுவும் பிரச்சனை தீர்வதற்காக முஸ்லீம் அல்லாதோருடன் கலந்து பேசி வருகிறார்கள் என்பதுவும் நம்பிக்கைய+ட்டும் செய்தியாகும். சில ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்கள,; சர்ச்சைக்குரிய அந்த கார்ட்டூன்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் எனவும், அவை மூலம் எழுப்பப்படும் பிரச்சனைகளை ஆரோக்யமான விவாதம் மூலமாக தீர்த்து தங்களது மதக் கருத்துக்கள் தூய்மையானவை என நிலைநிறுத்த வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
கார்ட்டூன் விவகாரம் எந்தச் சிக்கலும் இல்லாமல், சுமூகமாக முடிவதற்கு டென்மார்க் அரசும், பத்திரிக்கைகளும், இஸ்லாமிய பெரியோர்களும் தங்கள் நிலையிலிருந்து முழுமையான பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வேண்டும். இங்கிலாந்தின் இஸ்லாமிய மதத் தலைவர், "கார்ட்டூன் விவகாரத்தில் எங்களுக்கு இருக்கும் கோபத்தை சட்டத்திற்கு உட்பட்டு வெளிப்படுத்துவோம்" என்று கூறுகிறார். அதுபோல அந்தந்த தேசங்களின் சட்டங்களை மதித்து நடத்தப்படும் போராட்டங்களே மதிப்பு மிக்கதாக கருதப்படும்.

நெருக்கடி தரப்போகும் எரிசக்தி

அமெரிக்கா பெட்ரோலியத்தின் அடிமை" என அந்த நாட்டிலேயே சொல்லப்படுவதுண்டு. அதிகமாகிக் கொண்டே போகும் பெட்ரோலிய விலையும் அதிக அளவில் பெட்ரோலிய வளங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு எதிரான தேசங்களும் அமெரிக்கர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியைத் தரப்போகின்றன. மாற்று எரிசக்தியைப் பயன்படுத்தும் வழியைக் காணாவிட்டால் உலகம் முழுமைக்குமே எரிசக்தியினால் நெருக்கடி ஏற்படப் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. ஏற்கனவே எண்ணை மற்றும் எரிவாயுவினால் அமெரிக்கா பல மோசமான அனுபவங்களைக் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறது. இதே மாதிரியான பிரச்சனைகள் அமெரிக்காவின் பிரச்சனையோ அல்லது சில நாடுகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனையோ அல்ல. ஒட்டு மொத்தமாக ப+மியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நாடுகளும் சிந்திக்க வேண்டிய பிரச்சனை. எரிசக்தி வளங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்ளை ஏற்படுத்துவது இயல்பு. ஆனால் இனி வரும் காலத்தில் அரசியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்கனவே உள்ளதை விட அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது.
உலக எரிசக்தி பிரச்சனை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 2006 புத்தாண்டு தினத்தில், உக்ரைனுக்கு அளித்து வந்த எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியதில்தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. தற்போது சிறிய அளவில் விநியோகம் நடைபெற்று வந்தாலும் கூட, தன்னை உலகின் மிகப்பெரிய வல்லரசாக காட்டிக் கொள்ள ரஷ்யா தயாராகி விடுகிறது என்பதற்கான முன்னோட்டம் தான் இது. எண்ணை மற்றும் எரிவாயு வளங்களை ஈரான் தனது அணு ஆயுத சோதனை பற்றிய பிரச்சனை பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஈரானுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டால் எண்ணை ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. எண்ணை மற்றும் எரிவாயு வளங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு ஈரான் தயாராகி விட்டது என்பதற்கு இதுவே சாட்சி.
எரிசக்தி வளங்களை மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவது ஒரு அபாயகரமான முடிவாகும். 1970களில் சவ+தி அரேபியா இந்த மாதிரியான ஒரு உத்தியை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தியது. ஆனால் அந்த நாடுகள் தங்களுடைய எரிசக்தி தேவையை வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டதால், சவ+தி அரேபியா மிகப்பெரும் இழப்பைச் சந்தித்தது.
சரியாகச் சொல்வதெனில், எரிசக்தி ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகள் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. இறக்குமதி செய்யும் நாடு தன்னுடைய எரிசக்தி தேவைக்காக ஏற்றுமதி செய்யும் நாட்டினையும், ஏற்றுமதி செய்யும் நாடு தன்னுடைய வருமானத்திற்காக இறக்குமதி செய்யும் நாட்டினையும் சார்ந்திருக்கிறது.
ஆனாலும் கூட, இந்த கருத்துக்களையெல்லாம் மீறி ரஷ்யா உக்ரைனுக்கு அளித்து வந்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது, ஐரோப்பிய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஐந்தி;ல் ஒரு பங்கு எரிவாயு வளத்தை கொண்டுள்ள ரஷ்யா ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையில் கால்பகுதிக்கும் அதிகமாக ப+ர்த்தி செய்து வருகிறது. ஒருபக்கம் ஏந்திரமயமாதல் மூலமாக வளர்ச்சியடைந்து வரும் ஐரோப்பிய நாடுகள் அவற்றிற்காகவும் மக்களின் அன்றாட எரிசக்தி தேவைகளுக்காகவும் ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. இந்த வர்த்தகத்தின் மூலமாக ரஷ்யா மிக அதிகமான வருமானம் ஈட்டினாலும் உலகளாவிய பிரச்சனை ஏதாவது வரும்போது எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதன் மூலமாகவோ அல்லது குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ தனது கருத்தை நிலைநிறுத்துக் கொள்ளவே முற்படும். சமீபத்தில் ஈரான் அணு ஆயுத பிரச்சனையில் சீனா ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்வதற்கு மிக அடிப்படையான காரணம் ஈரானின் எண்ணை வளங்களேயாகும். ஏனெனில் ஈரானிடமிருந்து சீனா மிக அதிக அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. ஈரானுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஈரான், தனது கச்சா எண்ணை ஏற்றுமதியை நிறுத்திவிட வாய்ப்பிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டே சீனா செயல்பட வேண்டிய நிலையிலிருக்கிறது.
தற்போது தேசங்களின் அரசியல், பொருளாதார நிலைகள் அவை பெற்றிருக்கும் இயற்கை எரிசக்தி வளங்களான, பெட்ரோலியம், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பொறுத்து வருங்காலத்தில் முற்றிலுமாக மாறிவிடப் போகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் ரஷ்யா மீண்டும் உலகின் மிகப்பெரும் வல்லரசாக மாறிவிடும். ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் கூட உலகின் அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுக்கும். இதற்கு உதாரணமாக வெனிசுலா நாட்டினைக் கூறலாம். அமெரிக்காவிற்கு அரசியல் நெருக்கடி தருவதற்காக அந்நாடு தற்போது பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எரிசக்திக்காக பெரும்பாலும் பெட்ரோலிய கச்சா எண்ணை வளத்தையே உலக நாடுகள் நம்பியிருந்தன. இயற்கை எரிவாயு பயன்பாட்டில் இருந்தாலும் அது அப்போது "ஒரு நாட்டின் பொருளாதார பலத்தை மேம்படுத்தும் வளம்" என்பதை எந்த நாடும் அறிந்திருக்க வில்லை. பெட்ரோலியத்தின் தேவை அதிகமாகவே சில நாடுகள் மாற்று எரிசக்திக்காக முதலில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த ஆரம்பி;த்தன. முப்பத்;;;தைந்து வருடங்களுக்கு முன்பு கத்தாரில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டபோது அந்த நாட்டு அரசு முதலில் அதனை பெட்ரோலிய எண்ணை போன்றதொரு வருமானம் ஈட்டித்தருக்கூடிய வளமாகக் கருதவில்லை. ஆனால் தற்போது உலகின் மிகப்பெரும் இயற்கை எரிவாயு தொழிற்சாலை கத்தாரில் செயல்படுகிறது. அங்கு எரிவாயு திரவமாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் இதன் மூலமே உயர்ந்துள்ளது.
ஆனால் உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் அரசியல் தரமானதாக இல்லை எனில் இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் நாட்டு மக்களி;ன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பது இயலாத காரியம். உதாரணமாக நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே எண்ணை வளம் அதிகமாக உள்ள நாடாக இருந்த போதிலும் அங்கு பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுவதற்கு அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே காரணம். ராணுவப் புரட்சிகளும், அடக்கு முறைகளும் தவறான பொருளாதார கொள்கைகளும், மிக மோசமான வெளிநாட்டு வர்த்தக உறவுகளும் நைஜீரியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது.
உலகத்திற்கு எரிசக்தியால் வரப்போகும் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க மாற்று எரிசக்தியைக் கண்டறிவதைத் தவிர வேறு வழியில்லை. சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், காற்று சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மாற்று எரிசக்தி ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கிறது. ஜப்பானில்தான் மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்படுகிறது. சூரிய ஒளியில் இயங்கும் கார்களை ஜப்பான் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையில் உலகின் எரிசக்தி தேவையில் 2மூ மட்டுமே மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களின் அதிகமான விலையாகும். இதே போன்று பயோ டீசல் போன்ற தாவரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் எரி பொருட்களும் உலகின் எரிசக்தி தேவையில் மிகக் குறைந்த அளவே பூர்த்தி செய்ய முடியும். வருங்காலத்தில் எரிசக்தி தேவையால் நெருக்கடி ஏற்படும் போது மிக அதிகமாகப் பாதிக்கப்படப்போவது எரிசக்தி பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள்தான். இதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளும் ஐரோப்பியக் கூட்டமைப்பும் பாதிக்கப்படும் என்ற கருத்து உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்த பாதுகாத்துக் கொள்வதற்காக கியூபா போன்ற சில நாடுகள் பெட்ரோலியப் பொருட்களின் உபயோகத்தை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றன. இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவதோடு மற்ற நாடுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் தடுக்க முடிகிறது. இதையே மற்ற நாடுகளும் பின்பற்றி நடந்தால் வருங்கால சந்ததிக்கு எரிசக்தித் தேவையால் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பது இல்லாமல் போய்விடும்.

மதிக்கப்பட வேண்டிய தைவான்

அரை நூற்றாண்டின் மக்களின் அயராத உழைப்பினால் இன்று தைவான் பொருளாதார பலம் மிக்க நாடாக உயர்ந்திருக்கிறது. சீனாவுடன் உறவு பாதிக்கப் பட்டிருப்பதால், தைவானை தனி நாடாக அங்கீகரிக்க சீனா மறுக்கிறது. மேலும், தைவானுடன் ராஜீய உறவுகள் வைத்துக் கொள்ளும் எந்த நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்ள சீனா மறுக்கிறது. இதன் காரணமாகவே, ஐரோப்பிய நாடுகளும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளும் வர்த்தக பலம் மிக்க சீனாவுடன் ராஜீய, வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்வதை விரும்பி, தைவானைப் புறக்கணிக்கின்றன. உலகின் மிகச்சிறிய தென்னமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் 26 மட்டுமே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. ஐ.நா. சபையிலிருந்து 1971ல் தைவான் வெளியேற்றப்பட்ட பிறகு, அதை உறுப்பினராக்குவதில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உலகில் மக்களாட்சி முறையாக நடைபெற்று வரும் ஒரு நாட்டிற்கு ஐ.நா. சபையில் உறுப்பினராக அனுமதி மறுக்கப்படுவது, ஐ.நா. வின் சமதர்ம கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சீனாவும் தனது சர்வாதிகாரப் போக்கிலிருந்து விலகி வந்து தைவான் ஓர் நட்பு நாடாக அங்கீகரித்து அங்கு வாழும் 2¼ கோடி மக்களையும் உலக சமூகத்துடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு சமநிலை தோன்றி தீவிரவாதம் அற்ற சூழல் மலரும்.

நிறம் மாறும் கம்யூனிஸ்ட்டுகள்

இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் இந்தியாவில் கடந்து வந்த பாதை மிகவும் போராட்டம் மிகுந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவில் கம்ப்ய+னிஸ்ட்டுகளுக்கு தீவிரவாத முத்திரையும் உண்டு. மக்கள் போராட்டங்களில் கம்ய+னிசம் வளர்ந்தது என்றே சொல்லலாம். எனினும் சமீப காலங்களில் அவர்களது செயல்பாடுகள் சந்தர்ப்ப வசப்பட்டதாக அமைந்திருக்கிறது. பாரதீய ஜனதா மதவாத அரசியல் நடத்துவதால், காங்கிரசை அரியணை ஏற்றிய போது உண்மையிலேயே அவர்கள் தங்கள் பாதையில் சற்றே விலகினார்கள் என்பதை மறுக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திய போது தங்களது கருத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு ஆணித்தரமாக தெரிவிக்காமல், மத்திய அரசை எதிர்த்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியது அபத்தம். இதே மாதிரியான ஒரு சூழல் தான் கங்கைகொண்டானில் குளிர்பானக் கம்பெனியை அனுமதித்ததற்காக மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியபோதும் நிலவியது. இந்தப் போராட்டத்தில் எங்குமே மத்திய அரசு மீது குறை கூற முடியாத ஒரு தர்மசங்கடம் அவர்களுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் கம்ய+னிஸ்ட்டுகள் ஆளும் மேற்குவங்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தால் மாநிலமே ஸ்தம்பித்துப் போனது. உடனே அரசு, வேலை நிறுத்த உரிமை அத்துறைக்கு கிடையாது என்று அறிக்கை வெளியிட்டது. இதில் அரசுக்கும் சிஐடியு தொழிற்சங்கத்திற்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இதே போன்ற தெளிவில்லாத தர்மசங்கடமான நிலையைத்தான் தற்போதைய கம்ய+னிஸ்ட்டுகள் கொண்டுள்ளது. இதில் அரசியல் ரீதியாக அவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் அவர்களது கொள்கைகளில் கொஞ்சம் வலதுசாரி வாசனை வீசுவதை யாராலும் மறுக்க இயலாது

Tuesday, November 07, 2006

பிளே பாய்

எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்த ஒரு மாமனிதன் வரலாறு. விரைவில்.........