Wednesday, November 10, 2010

எம்ஜிஆர் ஹீரோ, நம்பியார் வில்லன், மோகன்ராஜை என்ன சொல்லலாம்?

மக்களின் மனத்திசையில் நம்மூர் ஊடகங்கள் செல்கின்றனவா அல்லது  ஊடகங்கள் காட்டும் வழியில் செல்ல மக்கள் முடிவெடுக்கிறார்களா என்கிற விவாதத்துக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை. இரு குழந்தைகளை திட்டமிட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட கோவை மோகன்ராஜ் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதும் இந்த விவாதம்தான் நினைவுக்கு வந்தது. கொடூரமாக் கொலை செய்த மோகன்ராஜ் என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின; பேசின. வழக்கு விசாரணையே முடியவில்லை. என்ன நடந்தது, பின்னணி என்பன போன்ற கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த தருணத்தில் முக்கியக் குற்றவாளி கொல்லப்பட்டுவிட்டது ஏன் என்ற எந்த ஊடகமும்  கேள்வி எழுப்பவில்லை. 1500 பேர் பின்னூட்டங்களில் காவல்துறையைப் பாராட்டினார்கள் என்று ஒரு பத்திரிகை தன்முதுகையே சொறிந்து கொண்டது.

எத்தனையோ கல்லூரிகளில், பள்ளிகளில் அவ்வப்போது மர்ம மரணங்கள் நடக்கின்றன. பலசம்பவங்களில் சந்தேகத்தின் பேரில்கூட நமது காவல்துறை யாரையுமே கைது செய்ததில்லை. பத்திரிகை அலுவலக எரிப்பிலும் கல்லூரி வாகன எரிப்பிலும் யாருமே இப்படிக் கொல்லப்படவில்லை. அவையெல்லாம் ஹை புரொபைல் வன்முறைகள் போல நாசூக்காகக் கையாளப்பட்டன.

லட்சம் கோடி அலைக்கற்றை ஊழலை மறந்து கொண்டிருக்கிறோம். சேது சமுத்திரம் கப்பல் கணக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. காமன்வெல்த் ஊழல் சுபமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.  கேமரா முன்னால் நன்கொடை வாங்கிய கல்லூரிக்காரர்கள் அதிகாரத்தில் தொடர்கிறார்கள். ஆண்டர்சன் ஆட்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பல்லிளித்தோம். லட்சம் பேரைக் கொன்றவனுக்கு கார் கதவைத் திறந்து விடுகிறோம். தேடும் குற்றவாளியை உள்துறை அமைச்சர் கட்டித் தழுவுகிறார். இப்படி பெரும்பாலான நிகழ்வுகளில் நாமெல்லாம் வேடிக்கை பார்க்கும் கும்பலாகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.

இப்போது ஏன் திடீர் கொந்தளிப்பு?

கெட்டவர்கள் ஒழிக்கப்பட்டதால் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்தால் இப்படி மனித உரிமை வியாக்கியானம் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். இந்த அபவாதங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

இன்னொரு குரூப் இருக்கிறது. இந்த என்கவுன்டரை மோடிக்கும் அமீத் ஷாவுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்கிறது.  அதாவது சொராபுதீன் மாதிரி ஆட்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது மட்டும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறதென்றால், மோகன்ராஜ் கொல்லப்பட்டதற்கும் சிபிஐ விசாரணை தேவையாம். ஓஹோ...

இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். ஊடகங்கள்.... செய்திகளில் கருத்துகளைத் திணித்து துப்பும் வேலையைச் செய்யும் ஊடகங்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு. அரசு ஜோடிக்கும் பொம்மையை நிஜமென்று ஒத்து ஊதுவது ஊடகங்களே.  இந்த ஊடகங்களின் உதவியுடன் அரச சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக,  உணர்ச்சி வசப்பட்ட மக்கள் செல்வாக்கும் திரட்டப்பட்டிருக்கிறது.

பிராய்டு விதிப்படி நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறோம். வழக்கம்போல் தேர்தல் வருகிறது.

...

...
..

4 comments:

பொல்லாதவர்களை வெறுப்பவன் said...

நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பண்ணாடைப் பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகல என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! 3 வயசுக்கு வந்த பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூலா வெளிய திரியனும்.(பான் பராக் போட்டு இவனுக மேல துப்பனும்)

பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுகளை கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு

விடுங்க தலைவா... இவனுகளை எல்லாம் நாய் கூட கடிக்க கூடாது பன்னி தான் கடிக்கனும் வாயக் கழுவாம

அத்திரி said...

good post

Anonymous said...

மோகன் ராஜ் அநேகமாக பார்ப்பனனாக இருக்கக் கூடும்....

Anonymous said...

மோகன்ராஜ் பார்ப்பான் அல்ல.

அவன் மலையாளி