கிரிக்கெட்டில் நிரந்தரப் புகழுடன் இருக்கும் பெருமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சச்சின் மாதிரி மிகச் சிலர்தான் அதைப் பெற முடிகிறது. இன்றைய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்துக்கு ஒரு காலத்தில் அடிதடி வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இன்று வர்ணணையில் வீரர்களை விமர்சனம் செய்யும் ரவி சாஸ்திரிக்கு செருப்பு மாலையே கிடைத்திருக்கிறது. கபில்தேவ் ஒரு தொடரில் தேவையேயில்லை என்று வெளியே வைக்கப்பட்டார். அதெல்லாம் அவர்களது அஸ்தமனத்தின் அறிகுறிகளாக அறியப்பட்டன.
இப்போது இந்த நிலைமை யுவராஜ் சிங்குக்கு வந்திருக்கிறது. 20 ஓவர் போட்டிகளின் முக்கியத்துவம் உணராத அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தார். யாரை கேப்டனாக்கலாம் என்கிற கேள்வி. முறைப்படி அந்தப் பதவி யுவராஜ் சிங்குக்குதான் வந்திருக்க வேண்டும். ஆனால் தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு யுவராஜ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை மீடியாவிடம் கோபத்தைக் காட்டினார். ஒன்றும் பலனளிக்கவில்லை.
அன்றைக்கே தொடங்கிவிட்டது யுவராஜின் அஸ்தமனம். தலைமைப் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் அவர் தோனியுடன் பனிப்போரைத் தொடங்கினார். அதன் விளைவைத்தான் அவர் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் தோஸ்துகளான ரெய்னா, முரளி விஜயையும் டெஸ்ட் அணியில் இருக்கும்போது யுவராஜுக்கு இடம் மறுக்கப்பட்டது. அதற்கு முந்தைய இலங்கையுடனான தொடரில் யுவராஜ் மோசமாக ஒன்றும் ஆடவில்லை. அதையெல்லாம் கேட்டுப் பயனில்லை. சீனிவாசனும் தோனியும் யுவராஜைப் பழிவாங்கவில்லை என்று சொன்னால் அதை நம்ப முடியாது.
இதிலேயே யுவராஜ் நொறுங்கிப் போனார். ஏற்கெனவே, ஐபிஎல் அரசியல் படுத்தும்பாட்டுடன், தோனியுடனான பனிப்போரில் அவரது கடைசி அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. அணியின் ஏ கிரேடு மெம்பரான அவர் பி கிரேடுக்கு இறக்கப்பட்டிருக்கிறார். சம்பளம் பாதியாகியிருக்கிறது.
யுவராஜ் கொஞ்சம் மோசமான பார்மில் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இப்போது கிரிக்கெட்டை விட்டே ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது யாரென்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.
..
..
.
Wednesday, November 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
He is equivalent to 10 ganguly.........(Dhoni)
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனவன் டீமுக்கு வெளியில - தோனி
unmai...
Post a Comment