Monday, February 07, 2011

ஆசிரியர்களை ஏன் அரசு மதிக்கிறது? ஒரு வயிற்றெரிச்சல்

"ஓ அவனா? என் ஸ்டூடன்ட்தான்" என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்கள்தான் ஆசிரியர்கள். பெரிய பதவி ஏதாவது கிடைத்தால், தனக்கு பயிற்றுவித்த ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடித்து நன்றி தெரிவிக்கும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். தமக்குக் கிடைக்கும் கௌரவத்தை தனது ஆசிரியருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவோர் மிக அதிகம். இது உண்மையான நன்றி நவிலலாகவோ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டியவரை வெட்கப்பட வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் நடவடிக்கையாகவோ இருக்கலாம்.

ஆனால், ஏதோ ஒரு வகையில் ஆசிரியர் குலம் கவனிக்கப்படுகிறது. எல்லோருடைய செயல்களிலும் எழுத்திலும் பேச்சிலும் அவரவர்க்குப் பாடம் நடத்திய ஏதாவது ஒரு ஆசிரியரின் சாயல் இருக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு இந்த உலகத்தில் மிக மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். அதுவும் பள்ளி ஆசிரியர்கள், நிச்சயமாக என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவர்கள். ஒருவர் எவ்வளவு உயர் நிலைக்குச் சென்றாலும், பள்ளிக்கூட வாத்தியாரை மறந்திருக்க மாட்டார். அது நேர்மறை அல்லது எதிர்மறைக் காரணங்களுக்காக இருக்கலாம்.

இந்த ஆசிரியர்கள் பயின்ற மாணவர்கள் மட்டுமல்ல அரசும் மதிக்கிறது. அரசின் மரியாதை மாணவர்கள் தரும் மரியாதையைக் காட்டிலும் பன்மடங்கு பெரிது. அவன் என் மாணவன்தான் என்று கூறுவதில் அடையும் பெருமையைவிட, நான் ஒரு அரசுப் பள்ளியின் ஆசிரியர் என்று கூறுவதில்தான் இன்றைய ஆசிரியர் குலம் பெருமை கொள்கிறது.
ஒரு மாணவன் ஆசிரியரை மதிப்பதற்கு ஒரேயொரு காரணம், ஏதோ ஒருவகையில் இவன் வாழ்க்கையில் வெற்றிபெற அவர் உதவியிருக்கிறார் என்பதாகத்தான் இருக்கும். ஒரு ஆசிரியரை அரசு மதிப்பதற்கும் இதேபோன்றதொரு காரணம்தான்.

இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்தில் எந்த அளவுக்குப் பாடம் நடத்துகிறார்கள் என்பது அரசுப் பள்ளிகளைப் பார்த்தாலே தெரியும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பள்ளிகள் நல்லவிதமாக நடந்து கொண்டிருக்கலாம். பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள் ஆசிரியர் அரட்டையடிக்கும் பொழுதுபோக்குக் கூடமாகவே இருக்கின்றன. ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளை செய்துவிட்டு எப்போதாவது நேரமிருந்தால்தான் பாடம் நடத்துவார்கள். பள்ளியே ஒரு ஆண்டில் 180 நாள்கள் செயல்படும் எனும்போது, இந்தச் செயல்படும் நாள்களிலும் மீதமுள்ள எல்லாவகையான விடுப்புகளையும் எடுத்துக் கொள்வார்கள். ஆண்டுக் கணக்கில்கூட அரசு விடுப்புத் தருகிறது.

சம்பளம் மற்றும் இதரப் படிகளைக் கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளக்கூடாது.  உலகிலேயே ஆள்குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பெருமந்தத்தால் பாதிக்கப்படாத கம்பெனி நமது தமிழ்நாடு அரசும், இந்திய அரசும்தான். இங்கு யாரையும் அவ்வளவு எளிதாக டிஸ்மிஸ் செய்து விட முடியாது. இத்தனையும் பெற்றுக்கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்தச் சமூகத்துக்குத் திருப்பிச் செய்வது பூஜ்ஜியம் மட்டுமே. இதில் ஒன்றிரண்டு விலக்குகள் இருக்கின்றன. இங்கு சொல்லப்படுவது பெரும்பான்மைக் கணக்கு மட்டுமே.

சரி இப்படி எந்த வகையிலும் சமூகத்துக்குப் பயன்படாமல் போய்விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதையை அரசு தர வேண்டும்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம். தேர்தலில் வாக்களிப்பது யார் என்று நமக்குத் தெரியும். வேறு யார் வாக்காளர்கள்தான். தேர்தலை நடத்துவது, பெரும்பாலான இடங்களில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்தான்.

ஒரு வாக்குச் சாவடிக்கு காவல் இருக்கும் போலீஸ்காரர், வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிக்கு வந்துவிடுவார். வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்வரை அவர் காவல் பணியில் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு நாள் பேட்டா அதிகபட்சம் ரூ.100 (நம்மூர் சிக்கன் பிரியாணியே ரூ.120 ). இந்த காசைக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் யாரையாவது பார்த்துக் கையேந்துவார் இந்த போலீஸ்காரர். எந்தக் காரணம் கொண்டும் வாக்குப் பதிவு நடக்கும் சாவடிக்குள் இவர் செல்லவே முடியாது.

ஆனால், வாக்குச் சாவடி அதிகாரிகளாகப் பணியாற்றும் ஆசிரியர் குலத்துக்கு சிக்கன் பிரியாணி மேஜைக்கே வரும். குறைந்தபட்சம் ரூ.850 முதல் ஆயிரத்து 500 வரை பேட்டா கிடைக்கும். சிக்கன் பிரியாணி எதற்காகக் கொடுக்கப்படுகிறதோ அதற்காகவேதான் இந்த பேட்டாவும் கொடுக்கப்படுகிறது என்பதை வெகுஜனம் புரிந்து கொள்ள வேண்டும். 2006 தேர்தலில் வெறும் 45 ஓட்டுகள்தான் போட்டேன் என்று எனக்குத் தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பீற்றிக் கொண்டது எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.

அரசு ஊழியர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஓட்டுப் போட்டால்கூட வெறும் 10 சதவீத வாக்குக்கூட தேறாது. இது எந்த வகையிலும் ஆட்சி மாற்றத்துக்கு உதவவே உதவாது. ஆனால், வாக்குச் சாவடிக்குள்ளே அவர்கள், "பணி"யாற்றுகிறார்களே அதற்காகத்தான் இந்த மரியாதையெல்லாம். ஆனால் ஆசிரியர்களுக்கே இது தெரியாது. ஏதோ நமது பணியைப் பாராட்டித்தான் அரசியல்வாதிகளுக்கு நமக்கு சலுகைகளை அள்ளிவீசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்செஸ் கணக்கெடுக்க செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் போராடுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கச் செல்ல மாட்டோம் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தைரியமிருந்தால், அனைத்து ஆசிரியர் யூனியன்களும் சேர்ந்து "வாக்குச் சாவடிப் பணியைச் செய்யமாட்டோம்" என்று போராட்டம் நடத்தட்டுமே பார்க்கலாம். அதன் பிறகு தெரியும் இந்த அரசியல்வாதிகள் தரும் உண்மையான மரியாதை.

.

..
...

8 comments:

கிணற்றுத் தவளை said...

பஹூத் அச்சாஹே

அஹோரி said...

மிக அருமையான பதிவு.

தி மு க அல்லகைகள் படிக்க வேண்டிய பதிவு.

Super Cook said...

Nanum ithu pattri (<10%) yosichathu undu, anna ippathan kannkku sariya puriyuthu

Jayadev Das said...

மஞ்சள் துண்டார் ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றாக கவனிக்கப் படுவது, அவர்கள், வாக்குச் சாவடியில் விசுவாசமாக இருக்கத்தான்! பேஷ்..பேஷ்..

மதுரை சரவணன் said...

இது தவறானக் கருத்து , ஒரு சிலரை மனதில் வைத்து பொதுவான கருத்துக்கு வருவது தவறு. அவர்களின் கடமை உணர்ச்சி , மட்டுமே இன்று உங்களை இப்படி சிந்தித்து எழுத செய்துள்ளது. அவர்களின் அற்பணிப்பை உணர்ந்தால் , இதற்கு மறுப்பு கொடுத்து ஒரு பதிவு இடுவீர்கள். அரசு மரியாதை என்பது ஒரு சமூக அந்தஸ்து. அதனை தவறாக மதிப்பீடு செய்துள்ளீர்கள். வருந்துகிறேன்.

புளியங்குடி said...

எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதில்லை. ஆசிரியர்களுக்கு அரசு தரும் மரியாதை ஏன் என்பதுதான். உண்மையில் இது ஆசிரியர்களே புரிந்து கொள்ளக்கூடியதல்ல. அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இது தெரியும். அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்தப் புரட்சி நடந்தாலும், அரசு ஊழியர்களை மட்டும் ஆதவாக வைத்துக் கொண்டால், எல்லாத் தேர்தலிலும் ஜெயிக்க முடியும் என்பதே ரகசியம். அரசு ஊழியர்களை ஒடுக்கும் எந்த அரசும் பிழைக்க முடியாது. மற்றபடி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு என்கிற சென்டிமென்ட் விஷயத்தை நான் கேள்வி எழுப்ப விரும்பவில்லை.

Jebastin said...

Completely WRONG attitude. AIADMK also has politicians. Why Jaya isn't giving some extra allowance to Teachers?

1. Padichavanukku padippoda Arumai Teriyathu
2. So Jaya Don't respect teachers
3. Kalvi in arumai terindhavar karunanidhi. Enna avar sorry avan padikkala
4. He respects all the teachers and he knows teachers mattum than ariyamaiyai olikka mudiyum.
5. Kalvi petrathal than, namadhu teahcer's namakku kalvi kan tirandhathal than ipadi teacher's samudhayathaiye KURAITHU elutha namakku mudikirathu.
6. Final question, CAN YOU MAKE YOUR own kids as IAS or IPS without sending them to a school or without a teacher? Veetla vachi GuruGulam nadathikkalamae? Ean mudiyala?
7. My Dad, My mom, My bro all r teachers. So i know how difficult is to teach
8. Can you go to Pudhuppati villege school, 18 KM inner from Alangulam to teach the village students everyday without using BUS; only by bicycle? My DAD did for 3 years.
9. My bro is in a filthy village school 8KM inner of rajapalayam. NO TOILET, NO WATER, no internet, NO proper cultured people (Half are scavenger people and 15% of the students are scavengers) . Can you do it?
9. Summa A/C roomla irundhutu eluthdakkodathu, Arasiyal vaathikalai thakki elutha ASIRYAR endra oru factor i Neenga eduthathu a real CHEAP.
10. You are also my teacher. without you i couldn't scored 92 marks in JAVA 2 theory, 100 marks in Java practical at my UG university exams. None of my class mate couldn't do this.
11. Cricket la thappu nadakku, athanala "noipl" is rocking. Ethunalum eluthalamnu eluthuna Phoenix manikandanukkum "crap Gnanikkum" enna vidhyasam?

Jebastin said...
This comment has been removed by the author.