Saturday, March 12, 2011

தினமலர் செய்திருக்கக் கூடாது!


ஜப்பானில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. சுனாமியின் பயங்கரத்தை நேரடியாக அறிந்தவர்கள் என்ற முறையில் ஜப்பான் சுனாமி காட்சிகளைப் பார்த்த தமிழகத்து மக்களுக்கு அனுதாபம் பிறந்திருக்கும். சுனாமியால் சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு கண்ணீரே வந்திருக்கும். சுனாமியில் உயிர் பிழைத்தவர்களுக்கு பழைய பயங்கரமான மரண ஓலங்கள் நினைவுகள் வந்திருக்கும். சுனாமி செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு மார்ச்சுவரியில் கேட்ட அழுகுரல்கள் திரும்பவும் காதுகளில் ஒலித்திருக்கும். சுனாமியில் இறந்தவர்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு புதைத்த படங்களை பத்திரிகையில் அப்போது பார்த்தவர்களுக்கு ஜப்பானின் சுனாமி அலைகள் மீண்டும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கும். நமது சொந்தங்களை கடல் அள்ளிச் சென்று 6 ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது. அதற்குள் அதை எப்படி மறந்திருக்க முடியும்?

ஆனால், அதிகம் பேர் படிக்கும் ஜனரஞ்சகமான தினமலர் அதை மறந்துவிட்டது போலும். ஒரு இயற்கைச் சீற்றம் நடந்தால் அதை எப்படிச் செய்தியாக்க வேண்டும் என்பது ஒரு சுனாமி வந்து போனபிறகும் நமது பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பது வேதனையளிக்கிறது. சுனாமி தாக்கிய நேரத்தில் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த பெண்களிடம் போய் மைக்கை நீட்டி "எப்படி உணர்ந்தீர்கள், இன்னொரு சுனாமி வந்தால் என்ன செய்வீர்கள்" என்று நமது தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் கேட்டார்களாம். அதை விட அருவெறுப்பாக கடந்த 12-ம் தேதியிட்ட தினமலர் முதல்பக்கம் இருந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்டு குடிநீருக்காகவும், துணிகளுக்காகவும் கி.மீ. கணக்கில் வரிசையில் நிற்கும் ஜப்பானிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் இருக்கும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. நெருக்கடியான தருணங்களைக் கடப்பதற்கு அவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"ஏன் இந்த மக்களையே மீண்டும் மீண்டும் தாக்குகிறாய் இயற்கையே" என்று உலகமே கண்ணீர் வடிக்கிறது.  சரி அந்த அளவுக்கு அனுதாபம் இல்லாவிட்டாலும், ஜப்பானில் உள்ள தமிழர்களுக்கு நிலையை நினைத்தாவது சுனாமி செய்தியை கவனமாக பிரசுரித்திருக்கலாம். ஆனால் முதல்வரின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையைும் சுனாமியையும் ஒப்பிட்டு எழுதியது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல்.

முதல்வரின் குடும்பம் சிபிஐ வளையத்துக்குள் வந்த செய்தி "இவர்களுக்கு நல்லா வேணும்" என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியிருக்கலாம். ஜப்பானியர்களை கொன்று குவித்த சுனாமி பற்றியும் தமிழன் அப்படித்தான் கேலியாக நினைக்கிறானா? நிச்சயமாக இருக்க முடியாது.  தினமலர் மட்டும்தான் அறியாமல் செய்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜப்பானில் வசிக்கும் தமிழர்களும், தினமலர் செய்தியைப் படித்த தமிழ் தெரிந்த ஜப்பானியர்களும் இந்த செய்திக்காக நம்மை மன்னிக்க வேண்டும்.
..
.

8 comments:

raja said...

IN DINAMALAR DAILY EDITORIAL COMPLETELY NON SENSE. ENNAI PORUTHAVARAI INDHA PATHIRIKAIYAI.. INDIAN GOVT SILA NAATKAL ALLATHU.. SILATHU WEEKS THADAI SEYYALAM. IVANGA.. NAM TAMIZH NATTIL TSUNAMI VANDHA SAMAYAM ENNA WALL PAPER DO YOU REMEMBER... TAMIZHAGAM AZHINDHATHU..... THEY ARE ALWAYS CRUDE BA.. DS... THATS ALL.

தமிழ்வாசி - Prakash said...

வர வர தினமலரோட தரம் ரொம்ப கொரஞ்சுக்கிட்டே வருது... சில முக்கிய செய்திகளை அவங்க தெளிவா சொல்றது இல்லை. சுனாமி பற்றிய செய்திகளை நான் NEWSHUNT (mobile internet)மூலமாக தெரிஞ்சுக்கிட்டேன். தினமலருல ரொம்ப சாதாரண நியூஸ் போட்டிருந்தாங்க.. தினமணியில் அதவிட கொஞ்சம் டீடெயில்லா போட்டிருந்தாங்க. ஆனா அதவிட டீடெயில்லா ஒன் இந்தியா தமிழ் போட்டிருந்தாங்க...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

ttpian said...

சேவை!
எல்லா தொகுதிகளிலும் ஜெயித்து முதல் அமைச்சர் ஆனவுடன் செய்த முதல் வேலை தொப்பி தொப்பி ,
ஈரோட்டு ஜோசியர் உட்பட எல்லா பதிவரையும் (பாதுகாப்பு சட்டத்தில்) :உள்ளே தள்ளி,பத்திரமாக ரெண்டு
பூட்டு போட்டு சீல் வைத்த பிறகு ஒருவரும் இல்லாத அறையில் நிருபர் சந்திப்பு!
(கவுண்டர் பெல் மட்டும் எப்படியோ உள்ளே வந்து விட்டார்!
கேள்வி: கல்வி கொள்ளையை எப்படி தடுக்கப்போகிறீர்கள்?
அரசாங்கமே நிறைய கல்லூரிகளை திறந்து டிப்ளமோ இன் நாமம் போடுதல் , டிப்ளமோ ன் திருச்சுர்ணம் ,
சர்டிபிகாடே இன்பாத்தியா ஓதுதல் ,
முதுநிலை அளவில் ஜெபமாலை எல்லாம் கற்றுத்தரும்!

பிரபு எம் said...

உங்கள் சிந்தனை ரொம்ப அழகானது... என்னுடைய வணக்கங்கள்....
ஜப்பானைத் தாக்கியிருக்கும் சுனாமி நமக்குப் புதியதல்ல.... அனுபவித்து உணரமுடியும் நம்மால் அவர்களின் வேதனையை.... உண்மை...

பத்திரிக்கைக்காரர்கள் ஆனால் உணரவில்லை... மைக்கைத் தூக்கிக்கொண்டு அலைகடல் ஆடிய அசுரவேட்டையில் அவர்களின் பரபரப்பு வியாபாரத்துக்குத் தீணி தேடினார்கள்.... ஏன் அரசு அதிகாரிகள் கூட உணர்ந்திருக்கவில்லையே.... பொய்க்கணக்குக் காட்டி இழப்பீட்டுப் பணத்தைச் சுரண்டினார்களே...

"தின‌ம‌ல‌ர்" இந்த‌ச் செய்தியிலும் அர‌சிய‌ல் என்கிற‌ போர்வையில் வியாபார‌த்தைக் க‌ல‌க்க‌ முய‌ற்சித்த‌தை நீங்க‌ள் எடுத்துச் சொன்ன‌பின்புதான் ஆழ‌மாக‌ உரைத்த‌து என்றும் சொல்லுவேன்... உங்க‌ள் உண‌ர்வுக்கு மீண்டும் என்னுடைய‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்....

Anonymous said...

பாவம்! பரிதாபம்! ஆட்சியாளர்கள் விதைத்த வினையை இன்று மக்கள் அறுக்கிறார்கள். இலங்கையில் லட்சோப லட்ச மக்கள்(மூன்று லட்சம்)கொல்லப்பட இதே ஜப்பான் தான் அதிக நிதிஉதவி செய்தது! அன்று (மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட அழிவு!) இலங்கையில் ஒலித்த அந்த மக்களின் அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! சாபம்! இன்று ஜப்பானில்(கடவுளின் தண்டனை)இந்த மக்களிடத்தில் (முப்பது லட்சம்)அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! ஒலிக்கிறது. இதற்கே இப்படி என்றால் இந்தியா செய்த உதவியை நினைத்தால், இந்தியாவிற்கு என்ன நேரிடுமோ? அதற்கு முன் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்! ஒரு வேலை அந்த மக்கள் மன்னித்தால் வாழ்வு இந்தியாவிற்கு! இல்லை அழிவு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் தான்! சிந்தனை செய்வோம்!
வினையை விதைத்தவன் வினையை அறுத்தே தீருவான்!

Anonymous said...

பாவம்! பரிதாபம்! ஆட்சியாளர்கள் விதைத்த வினையை இன்று மக்கள் அறுக்கிறார்கள். இலங்கையில் லட்சோப லட்ச மக்கள்(மூன்று லட்சம்)கொல்லப்பட இதே ஜப்பான் தான் அதிக நிதிஉதவி செய்தது! அன்று (மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட அழிவு!) இலங்கையில் ஒலித்த அந்த மக்களின் அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! சாபம்! இன்று ஜப்பானில்(கடவுளின் தண்டனை)இந்த மக்களிடத்தில் (முப்பது லட்சம்)அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! ஒலிக்கிறது. இதற்கே இப்படி என்றால் இந்தியா செய்த உதவியை நினைத்தால், இந்தியாவிற்கு என்ன நேரிடுமோ? அதற்கு முன் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்! ஒரு வேலை அந்த மக்கள் மன்னித்தால் வாழ்வு இந்தியாவிற்கு! இல்லை அழிவு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் தான்! சிந்தனை செய்வோம்!
வினையை விதைத்தவன் வினையை அறுத்தே தீருவான்!

பதிவுலகில் பாபு said...

உங்களுடைய கருத்து சரியானது..

தினமலர்.. திருட்டுப் பத்திரிக்கை..

விஜய் said...

சன் டிவியும் நேற்று சுனாமி செய்தியை கூவிக்கூவி விற்றது.