Friday, January 01, 2010

மூலிகைப் பொக்கிஷம்: நிலவேம்புக் குடிநீர்

மர்மக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என பல பெயர்களில் தமிழகத்தில் காய்ச்சல்கள் நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலும் அலோபதி மருந்துகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. உடனடியாக நிவாரணம் தேடும் மக்களும் அதையேதான் நாடுகிறார்கள். அந்தக் காலத்தில் மூலிகை ரகசியங்கள் காக்கப்பட்டதுபோல இந்தக் காலத்தில், மாத்திரைகளின் ரகசியங்கள் காக்கப்படுகின்றன. பெரும்பாலான மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளிலேயே இந்த ரகசியக் காப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தக் கால நவீன மருத்துவர், மருந்துச் சீட்டு எழுதித் தருவார். ஓவர்டோஸ் எடுத்துக் கொண்டாலோ அல்லது ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிப்பதேயில்லை. பக்கவிளைவுகளைவுகளும் பரம ரகசியம்தான். இணையம் வந்துவிட்ட பிறகு, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளின் பக்கவிளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிவதால், அலோபதி மருந்துகளை உபயோகிப்பவர்கள் அதன் பக்கவிளைவுகளைப் பற்றி மருத்துவரிடம் விவாதிப்பது நல்லது.

வீட்டிலும், பயணம் செய்யும்போதும் பாரசிட்டமால் மாத்திரைகளைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும் என்கிற உலகளாவிய அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவன்தான் நானும். டோலோ 650 மாத்திரைகள் இல்லாமல் காய்ச்சலையும் தலைவலியையும் குறைக்கவே முடியாது எனத்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நானும் நம்பிக் கொண்டிருந்தேன்.  பாரசிட்டமால் தொகுப்பாக வரும் நீண்ட, வட்ட வடிவமான விதவிதமான மாத்திரைகளை இப்போதெல்லாம் நான் தொடுவதேயில்லை.

காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு அவசரப்பட்டு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் நிலவேம்புக் குடிநீர் கஷாயம் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.  பாக்கெட்டுகளில் கிடைக்கும் இந்த உலர வைக்கப்பட்ட மூலிகையை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால், எப்பேர்ப்பட்ட வைரஸ் காய்ச்சலும் குணமாகும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட இந்த மூலிகையை, நானே பல முறை பயன்படுத்தியிருக்கிறேன். முழுமையாகத் தெரிந்து கொள்ள அருகிலுள்ள, நம்பிக்கையான சித்த மருத்துவரை அணுகலாம்.  கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டுடன் இந்த மூலிகையும் சேர்ந்தால், பாராசிட்டமால் இல்லாமலேயே காய்ச்சலை விரட்ட முடியும் என நான் நம்புகிறேன்.

.

5 comments:

சிந்திப்பவன் said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது.நானும் இந்த நிலவேம்பு கசாயத்தைக் குடித்து பயனடைந்திருக்கிறேன்.

goma said...

அந்தக்காலத்தில் வாசுதேவநல்லூரிலிருந்து வைத்தியர் ஒருவர் எங்கள் குடும்ப வைத்தியராக இருந்தவர்.அவர் தரும் செந்தூரம்,மெழுகு மாத்திரை....இப்பொழுது நினைத்தாலும் உவ் உவ்....வே

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

Sivamjothi said...

அருமை !!! இதை தெய்வநாயகம் அய்யா சொல்லி இருக்கிறார்

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/blog-post_04.html