Monday, January 11, 2010

முகப்பேரில் சமத்துவப் பொங்கல்

முகப்பேர் பேட்மின்டன் கழகம் என்பது சென்னை முகப்பேர் ஜஸ்வந்த் நகர் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. நாள்தோறும் காலை 5 மணிக்கெல்லாம் ராக்கெட்டும் கையுமாக ஜஸ்வந்த் நகர் பூங்காவை ஆக்கிரமித்திருப்பார்கள்.




நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து முகப்பேரில் இணைந்திருக்கும் இவர்கள் வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு மதங்களையும் இனக் குழுக்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இணைந்து, அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை கடந்த ஜனவரி 10-ம் தேதி சமத்துவமாய்க் கொண்டாடினார்கள்.




அதிகாலையிலேயே பூம் பூம் மாடு ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டியது. பின்னர் மாட்டு வண்டியில் வேட்டி, சட்டையுடன் முண்டாசு கட்டிய இளைஞர்கள் தெருக்களை வலம் வந்தனர்.

பெண்கள் கோலமிட்டனர். இதற்கான போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது.  கிராமிய மணம் கமழும் வகையில் பெண்கள் குலவைக்கிடையே,  அனைவரும் அரிசியிட்டு பொங்கல் வைத்தனர்.







மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழகக் கிராமங்களைக் கண்முன் நிறுத்தினர். நாட்டுப் புறப்பாடல்களைப் பாடல்களைக் கேட்டபோது என்போன்ற இடம்பெயர்ந்தோருக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.







இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பானை உடைக்கும் உறியடி நடந்தது. சிறுவர்கள் ஆடிய கரக ஆட்டம் சிலிர்க்க வைத்தது.

நானும் இந்த அணியில் உண்டு.

..
.

2 comments:

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி :). அருமையான நிகழ்வு :).

முகப்பேர் பல அனுபவங்களைத் தந்த இடம்.. அங்கே நடக்கும் நிகழ்வுகள் குறித்து அறியத் தந்ததில் மிக்க மகிழ்ச்சி :)

sathishsangkavi.blogspot.com said...

இந்த அழகான நிகழ்வில் கலந்து கொண்டு கலக்கிய அனைவருக்கும்

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...