Wednesday, February 17, 2010

தமிழ்நதி மீது குழந்தைத்தனமான தாக்கு!

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் முக்கால்வாசி, வணிக நோக்கத்துடன்தான் செயல்படுகின்றன. வெளிநாட்டுக் கரன்சிகளைக் குவிப்பது மட்டுமே அவர்களது நோக்கம். இது புதுவிதமான வணிக உத்தி. மிக உயர்வாகப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் சில தொண்டு நிறுவனங்கள்கூட குழந்தைகளை விற்பதிலும் வேறு மாதிரியான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. ஆனாலும் மிகச் சில தொண்டு நிறுவனங்கள் உண்மையாக இருக்கின்றன. பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறார் தொழிலாளர் கல்வி போன்றவற்றையும் மேற்சொன்ன தொண்டு நிறுவன மாதிரியுடன் நேர்கொள்ளலாம்.

பெரியார் காலத்தில் பெண்ணியம் பேசுவதும் பார்ப்பன எதிர்ப்பும் ஆலய நுழைவு போன்ற தலித் ஆதரவு நடவடிக்கைகளும் வரவேற்கத் தக்கவையாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் அவர் நியாயமென நினைத்ததையெல்லாம் செய்தார். அதுதான் புரட்சி. இப்போது நிலை மாறியிருக்கிறது. இப்போது பெண்ணியம் பேசுவது எதிர்ப்புக்குரியதல்ல. பெரிய வரவேற்புக் கிடைக்கும். புத்திசாலிகள் அதை விற்றுக் கொழிக்கவும் வழியிருக்கிறது. அரைப் பக்கக் கட்டுரைக்கே லட்சக் கணக்கில் அவார்டு பணம் கிடைக்கும். ஒரு பேச்சுக்குச் சொல்வதென்றால், இந்தச் சூழலில் பெண்ணிய எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு போன்றவைதானே பெரியார் போராட்டங்களுடன் ஒப்பிடக் கூடிய புரட்சிகளாக இருக்க முடியும்?

பெண்ணியம் பேசுவதும், தலித் ஆதரவு நடவடிக்கைகளும் இன்றைக்கும் தேவைதான். அவைகளால்தான் சமூகம் சமநிலையுடன் இருக்கும். ஆனால், இந்தக் காலத்துப் புரட்சிகளெல்லாம் வணிக நோக்கத்துடனும், விளம்பரக் கலப்புடனும்தான் இருக்கின்றன. மோசடிகளும் போலிகளும்கூட உண்டு. உண்மைகளைவிட போலிகள் மிக நேர்த்தியாகத் தெரியும். இதனாலேயே சமூகத் தொண்டு நிறுவனங்களையும், பெண்ணியம் போன்றவை பேசி பெரியார் வழி வந்தவர்களாகக் காட்டிக் கொள்வோர் பலரையும் பற்றி எனக்குள் அதிருப்தி இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் உண்மையிலேயே உண்மையான பெண்ணியவாதியாகவும் சமூகப் பொறுப்புள்ளவராகவும் தமிழ்நதியை நான் கருதுவதுண்டு.

-------------

தமிழ்நதியைத் தாக்கி வலைப்பதிவு ஒன்றில் பொறுப்பற்றதனமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோதுதான், வலைப்பதிவு சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எழுதியிருப்பவரும் ஒரு பெண்தான். கிண்டல் என்கிற பெயரில் ஈழக் கொலைகளையும், தமிழ்நதியின் பெயரையும் அருவருக்கத் தக்க பொருள்படும்படி அவர் எழுதியிருப்பது அபத்தம் மட்டமல்ல ஆபத்தானதாகவும் தெரிகிறது. அதுவும் தமிழ்நதியின் படத்தையெல்லாம் போட்டு தமிழக புலனாய்வுப் பத்திரிகைகளை மிஞ்சிவிட்டார்.

தமிழ்நதியை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு அந்தப் பெண் பதிவருக்கு போதிய அனுபவம் இல்லையென்பது அவரது எழுத்துக்களிலேயே தெரிந்தது. அவர் குழந்தைத் தனமாக அறிமையாமையில்தான் இப்படி எழுதினார் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், எப்படியாவது புகழ்பெற வேண்டும் என்கிற ஆசையையும் யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்கிற துடுக்குத் தனத்தையும் ஊக்கப்படுத்த முடியாது. இதைப் பார்க்கும்போது, ஒரு விவகாரம் தொடர்பாக ஓரளவுக்காவது தெரியாதவரை அதைப் பற்றி எழுதுவது தவறு என்கிற அடிப்படையைக் கூட நமது வலைப் பதிவர்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

ஒரு கண்ணியமான பத்திரிகையாளனுக்குரிய எல்லா வரையறைகளும் நமக்கும் பொருந்தும் என்பதை வலைப்பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறாகச் செய்தியையும் கட்டுரையையும் வழங்கினால் பலருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்கிற பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும். புகழ்பெற்றவர்கள் தங்களுக்குள் போலியாகச் சண்டையிட்டுக் கொண்டு புகழை அதிகரித்துக் கொள்வதும், வளரும் பதிவர்கள் பலர், புகழ் பெற்றவரைத் தாக்கி அதன் மூலம் புகழ் பெறுவதும் வலைப்பதிவுகளில் அதிகரித்து வரும் நிலையில் இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கவலை நியாயமானதுதானே?

-----------------------

தமிழ்நதி போன்ற புகழ்பெற்றவரின் பெயரைத் தலைப்பில் இட்டு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் சிறிதும் எனக்குக் கிடையாது. ஆனால் அப்படிக் கருதப்படுவேனோ என்கிற கூச்சம் இருக்கிறது.

..
.

14 comments:

ஸ்வாதி said...

நிலவைப் பார்த்து நாய் குரைப்பதால் நிலவுக்கு ஏதும் நட்டமா?? அப்படியே தான் தமிழ்நதியைப் பற்றி புறம் சொல்பவர்களால் தமிழ்நதி எந்தவிதத்திலும் குறைந்துவிடப் போவதில்லை..! தங்களை வெளிச்சத்தில் கொண்டுவர சில சில்லறைகள் இப்படித் தான் பிரபலங்களை தூற்றுவார்கள் அல்லது ஜால்ரா அடிப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட பெண் பதிவரும் அப்படியே..

தமது சாதனைகளால் தம்மை தரம் உயர்த்திக் கொள்ள கையாலாகாதவர்கள் மற்றவர்களைப் பற்றி தாழ்வாகப் பேசினால் தாங்கள் சிறப்பானவர்களாகலாமென்று கற்பனை செய்கிறார்கள் போலும்.

ஊடக சுதந்திரம் என்ற ஒன்றைக் கையிலெடுத்தால் நானும் சரி நீங்களும் சரி யாரை வேண்டுமானாலும் எங்கள் கற்பனைக்கேற்றவாறு எழுதித் தள்ளிவிடலாம், வாசகர்களை கேனையர்களாக தப்புக் கணக்குப் போட்டால்.... :(:(

Jebastin said...

பழுத்த மரம் கல்லடி படத்தான் செய்யும், I don't think we should retaliate.

could you please share the reference link?

ஸ்வாதி said...

"பதிவுலகம் ஒரு குடும்பமெனச் சொல்லிக் கொண்டு அன்பைப் பிழியும் அண்ணாக்களும் அக்காக்களும் இது போன்ற அபாண்டங்களைக் காணும்போது நீ யாரோ நான் யாரோ என ஒதுங்கி விடுகிறார்கள். தட்டிக் கேட்க யாருமில்லை."
--

ஒரு வகையில் இது உண்மை தான். ஈழத்துப் பிரச்சினையில் பொய்பிரச்சாரம் செய்து கொண்டு தங்களை மஹான்களாகவும், அன்னை தெரேசாக்களாகவும் காட்டிக் கொண்டு போராட்டத்தை தூற்றியவர்களை அடையாளம் காட்டப் போய் எத்தனையோ வசைகளையும், வடுக்களையும் பிரதிபலனாக பெற்று தமிழ்நதி உட்பட பல ஈழ ஆதரவாளர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். குழுமம் குழுமமாக போன வருடம் இதே நாட்களில் ஈழமும், அதன் நிகழ்வுகளும் இத்தகைய மஹான்களினதும், தெரேசாக்களினதும் குலவையில் கும்மப்பட்ட போதும் எந்த அண்ணாக்களும், அக்காக்களும், தம்பிகளும் கண்டு கொள்ளவில்லை..தான்!! அது இன்னமும் எனது நெஞ்சில் வடுவாகத் தான் இருக்கிறது. அதற்காக நான் யாரையும் நொந்து கொள்ள முடியாது. காலம் வரும் , அப்போது அவர்கள் அனைவருக்கும் முகத்திலடித்தாற் போல் நிகழ்வுகள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்..இருக்கிறோம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரை தூற்றும் வசைபாடலுக்கு நாம் பதிலளிக்கப் போனாலும் தூற்றுபவர் இன்னமும் சேற்றை வாரி வீசச் செய்வாரே தவிர தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கமாட்டார். ஏனெனில் அவர் ஒன்றும் இயேசு பிரான் அல்ல; கொடிய பொறாமை பிடித்த விரோதி! அவரைப் பொறுத்தவரை தனது வக்கிரமமான வெறி தீரும் வரை வசையைப் பாடி தீர்ப்பாரே தவிர திருந்தமாட்டார்.

தூற்றுவார் தூற்றினாலும் போற்றுவார் போற்றினாலும் என் கடன் நல்லதை எழுதுவதே என்று இருங்கள் !!

7:52 AM

சந்தனமுல்லை said...

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். அது முழுவதும் விளம்பர நோக்கத்திற்காக எழுதப்பட்டது போலவே தெரிகிறது. அதுவும், தமிழ்நதியின் பெயரை கிண்டலடித்திருப்பது - மிகவும் அருவறுக்கத்தக்கது. அந்த பதிவருக்கு தமிழ்மொழி மேல் பாசமில்லையெனில் - அவரது பெயரை மாற்றிக்கொள்ளட்டும்..இதில், தமிழ்நதியின் பெயரை நக்கல் தொனியில் எழுதியிருப்பது தனி மனித தாக்குதலன்றி வேறென்ன? தமிழ்நதியின் கட்டுரையை பற்றி அவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் தமிழ்நதி சொல்வதை அவர் சரியாகப் புரிந்துக்கொண்டுதான் எழுதுகிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது.

இந்த இடுகைக்கு நன்றி, அய்யா!

V R said...

உங்கள் கருத்துடன் உடன் படுகேறீன். சறேயன சமயத்தில் எதை சுட்டி காட்டி கருத்தை கூரெயதுக்கு நன்றி.

புளியங்குடி said...

ஸ்வாதி...

உங்களது முதல் பின்னூட்டத்தின் முதல் வரி சம்பந்தப்பட்டவரைப் புண்படுத்தக்கூடியதில்லையா? இன்னும் வன்மம் வளருவதற்கு இது வழிவகுக்கக்கூடுமே. மற்றபடி உங்களது கோபம் நியாயமானது.

ஷரீப்...
ஈழத்துக்காரர் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என்கிற கருத்து தவறானது என்று நினைக்கிறேன்.

சந்தன முல்லை...

தமிழ்நதியை அந்தப் பதிவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை. அவர் முதல் பதிவை எழுதும்போதே பிரத்யேகமாக மின்னஞ்சல் எழுதி அவருக்குப் புரிய வைக்கலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் அவர் இரண்டாவது பதிவையும் எழுதிவிட்டார்...

அவருடைய எழுத்து நடை நன்றாக இருப்பதால் ஆக்கப்பூர்வமாக எழுதலாம் என நான் அவரை அறிவுறுத்தியிருப்பேன். கனமான விஷயங்களைக் கையிலெடுக்கும்போது கவனமாக இருக்கத் தவறிவிடுகிறார்.

ஜெபஸ்...

என்னைப் போலவே சிந்திக்கிறாய்... அந்தத் தொடுப்பைத் தர இயலாது மன்னிக்கவும்... அது மேலும் விளம்பரத்துக்கு வழிவகுக்கும்.

Deepa said...

//கிண்டல் என்கிற பெயரில் ஈழக் கொலைகளையும், தமிழ்நதியின் பெயரையும் அருவருக்கத் தக்க பொருள்படும்படி அவர் எழுதியிருப்பது அபத்தம் மட்டமல்ல ஆபத்தானதாகவும் தெரிகிறது.//

நிச்ச‌ய‌மாக‌. ப‌கிர்வுக்கு ந‌ன்றி.

வில்லனின் விநோதங்கள் said...

எஸ்க்யூஸ் மீ அக்கினி, சில கமெண்டுகள் தங்கள் சொந்த பிரச்சனைகளை அலாசுகிறார்கள், பின்னூட்டங்களை நீக்கிவிடுங்களேன்

Anonymous said...

பதிவர் தமிழ்நதி மீதான காழ்ப்புணர்வுப் பதிவை எதிர்த்து நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள். அந்தப் பதிவிலேயே பதிவர் ரிஷானுக்கெதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கருத்துக்களாக ஏன் அனுமதிக்கிறீர்கள்?

வில்லனின் விநோதங்கள் said...

ரிசானின் பதிவையும் அல்லது அந்த சில வார்த்தைகளையாவது நீக்க வேண்டும்.

Anonymous said...

//தனிப்பட்ட முறையில் ஒருவரை தூற்றும் வசைபாடலுக்கு நாம் பதிலளிக்கப் போனாலும் தூற்றுபவர் இன்னமும் சேற்றை வாரி வீசச் செய்வாரே தவிர தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கமாட்டார். ஏனெனில் அவர் ஒன்றும் இயேசு பிரான் அல்ல; கொடிய பொறாமை பிடித்த விரோதி! அவரைப் பொறுத்தவரை தனது வக்கிரமமான வெறி தீரும் வரை வசையைப் பாடி தீர்ப்பாரே தவிர திருந்தமாட்டார்.

தூற்றுவார் தூற்றினாலும் போற்றுவார் போற்றினாலும் என் கடன் நல்லதை எழுதுவதே என்று இருங்கள் !!// பதிவர் ஸ்வாதியின் அதே கருத்துத்தான் எனதும் !

Dr.Rudhran said...

எனக்கென்னவோ அந்தப் பெண் நகைச்சுவைக்காவே எழுதியிருப்பதாகவே இன்னும் படுகிறது.
தமிழ்நதி தரப்பு நியாயம் பற்றி நான் என்ன சொல்வது?
மூத்தவர் இளையவரை ஊக்குவித்தலும் திருத்தலுமே வருங்காலம் குறித்த அக்கறை.

Anonymous said...

அந்தப் பதிவர் ஈழப் பிரச்னை பற்றி முழுதாக அறியாமல் எழுதி இருக்கலாம்;ஆனால் தமிழ்நதி குமுதம் கட்டுரையில் வெளிப்படுத்தி இருக்கும் சீ சீ ரகமான கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தமிழ்நதி ஈழத்துப் பிரச்னை பற்றி எழுதினாலோ அல்லது புத்தகம் வெளியிட்டாலோ அது மட்டும் உணர்வு ரீதியானது என்றும் தமிழக பத்திரிகையாளர்கள் எழுதினால் அது ரத்த வியாபாரம் என்ற ஏச்சும் ஒத்துக் கொள்ளத்தக்கதல்ல.

அதைக் கேள்வி கேட்பதும் மிக நியாயமே..கிருபாநந்தினியின் எழுத்து நடை வேண்டுமானால் கண்டிக்கத்தக்கது;ஆனால் கருத்து கண்டிக்கத் தக்கது அல்ல !

மேலும் தமிழ்நதிக்கு எழுப்பி இருப்பதாகச் சொல்லப்படும் அந்த இன்னொரு பத்திரிகையாளரின் கேள்விகளும் அர்த்தம் பொதிந்தவையே..அவற்றில் ஒன்றுக்கானும் தமிழ்நதி தமது வாதங்களில் பதில் அளிக்கவில்லை என்பதையும் இங்கு சுட்ட விரும்புகிறேன்.

Anonymous said...

//Dr.Rudhran said...

எனக்கென்னவோ அந்தப் பெண் நகைச்சுவைக்காவே எழுதியிருப்பதாகவே இன்னும் படுகிறது.//

ஐயா, நகைச்சுவைக்கு ஈழத்தமிழர் பிரச்சினைதானா அவருக்கு கிடைத்தது. ராஜீவ் கொலை என்ற ஒரு காரணத்துக்காக ஈழத்தவர்கள் வாய் திறக்கக்கூடாதா என்ன?
அரசாங்கமே ஹெலிகாப்டரில் வந்து தமிழர் குடியிருக்கும் இடங்களில் மலம் வீசும் இடத்தில் அவர் குடியிருந்திருந்தால் ஈழத்தவர் படும் பாடு என்ன என்பது விளங்கியிருக்கும். இது கேலிப்பொருள் அல்ல என்பது விளங்கியிருக்கும்.