முக்கியம்: டாஸ் பூட் டிக்ஸ் மூலம் 32 ஜிபிக்கு குறைவான ஃபேட் டிரைவ்களை மட்டுமே அணுக முடியும். சில நேரங்களில் டாஸ் மூலமாக மட்டுமே பூட் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் அப்போது இந்த டிஸ்கை பயன்படுத்தலாம்.
பொதுவாக ஃபிளாப்பி டிஸ்குகளை ஃபார்மேட் செய்வதற்கு எக்ஸ்ப்ளோரரில் டிரைவ் லெட்டர் மீது வலது கிளிக் செய்து ஃபார்மேட் செய்வோம். அப்போது create dos boot disk என்ற தேர்வு இருக்கும். ஆனால, யுஎஸ்பி டிரைவை ஃபார்மேட் செய்யும்போது இந்தத் தேர்வு மறைந்து போயிருக்கும். இதனால், யுஎஸ்பி டிரைவை பூட் டிஸ்க்காக மாற்ற முடியாது.
இந்த மறைந்து போன தேர்வுகளைச் தெரியச் செய்வதற்காக windows enabler என்னும் சிறிய டூல் இருக்கிறது. இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கும். இதை இயக்கிவிட்டு, யுஎஸ்பி டிரைவை பார்மட் செய்தால், create dos boot disk தேர்வை செலக்ட் செய்ய முடியும். இப்போது ஃபார்மட் செய்தால் பூட் டிஸ்க் தயார். கவனிக்கவும், இந்த பூட் டிஸ்க் பிளாப்பி போல 1.44 எம்.பி அளவுக்குதானஅ இரு்ககும்.
எச்பி இணையதளத்தில் இதற்கான வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன. யுஎஸ்பி டிரைவிலேயேயிலேயே எக்ஸ்பி இயக்க அமைப்பைப் பதிவு செய்யவும் வழியிருக்கிறது.
முடியாததை முடித்து வைக்கும் விண்டோஸ் எனாப்லர் (xp, 2000,98)
விண்டோஸ் இயக்க அமைப்பில் சில நேரங்கள் மெனுக்கள், செக் பாக்ஸ்கள், பட்டன்கள் ஆகியவை கிளிக் செய்ய முடியாதபடி செயல்படாத நிலையில் (disabled) மறைந்து போயிருக்கும். அவற்றை கிளிக் செய்தாலும் எந்த வேலையு்ம் நடக்காது. இவற்றையெல்லாம் தெரியச் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிதான் விண்டோஸ் எனாப்லர். இணையத்தில் தேடினால் இது கிடைக்கும். இதை இயக்கிவிட்டு, disabled ஆக உள்ள பட்டன்கள், செக் பாக்ஸ்கள், மெனுக்களில் கிளிக் செய்தால் அவை இயங்கும்.
கவனம்: அவசியத் தேவை இல்லாமல் இதைப் பயன்படுத்தவது இயக்க அமைப்பைக் குலைக்கும்.
Thursday, December 03, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment