முழு அனுமதி இருந்தது.
தவறுகள் ரசிக்கப்பட்டன.
தவறுகளை எல்லோரும்
புரிந்து கொண்டார்கள்.
இன்னொரு முறை செய்
என்றுகூடச் சொன்னார்கள்.
தவறுகளை எல்லோரிடமும் சொல்லி
பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.
எந்தத் தவறுக்கும்
தண்டனையே இல்லாதிருந்தது.
ஒரே தவறைத்
திரும்பத் திரும்பச் செய்யலாம்.
வேண்டுமென்றே கூடச் செய்யலாம்.
எதற்கும் வெட்கமே இல்லை.
அவமானமும் இல்லை.
பயமும் இல்லை.
கவலையும் இல்லை.
அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து,
பள்ளியில் சேர்த்தார்கள்.
ப்ச்..
..
2 comments:
கலக்கல்..........கவிதை....சிறு வயது ஞாபகங்கள்
இப்போது செய்து பாருங்களேன். என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
Post a Comment