கணினியில் உள்ள கோப்புகளைப் பெயர் மாற்றம் செய்வதற்கு மென்பொருள் தேவையா? சாதாரணமாகத் தேவையில்லைதான். ஒரு கோப்பை பெயர் மாற்றம் செய்வதற்கு நிச்சயமாகத் தேவையேயில்லை. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயக்க அமைப்புகளில் ஒட்டு மொத்தமாக பெயர் மாற்றம் செய்யும்போது, கோப்புகளின் பெயர்கள் நாம் விரும்பும்படி அமைவதில்லை.
உதாரணத்துக்கு நம்முடைய செல்போன் அல்லது கேமராவில் இருந்து படங்களை ( 20, 50, 100 என அதிக எண்ணிக்கையில்)பதிவிறக்கம் செய்கிறோம். அதன் பெயர் dc001.jpg, dc002.jpg.... என்பது போல இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அவற்றை meet1, meet2, meet3... எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒவ்வொன்றாக பெயர் மாற்றம் செய்வது எரிச்சலான வேலையாகத்தான் இருக்கும். mp3 பாடல்களுக்கு வரிசையாகப் பெயர் கொடுக்கும்போதும் இதே கதைதான். அதுவும், முன்னாலும் பின்னாலும் பெயரைச் சேர்க்க வேண்டுமென்றால் கொடுமைதான். டாஸ் தெரிந்தவர்களுக்கு (ஆழமாக) இந்த வேலை கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால், இறுதிநிலைப் பயன்பாட்டாளர்கள்?
அவர்களுக்காகவே, நிறைய மென்பொருள் கருவிகள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் ரீநேமர் (renamer) என்கிற கருவி கொஞ்சம் வசதியானதாகத் தெரிகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்தக் கருவி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. பாஸ்கல் ஸ்கிரிப்ட் தெரிந்தவர்கள் இன்னும் முறையாகப் பயன்படுத்தலாம்.
பதிவிறக்கம் செய்ய...
http://rapidshare.com/files/312501957/ReNamer.zip
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment