Wednesday, November 18, 2009

பசுமையாகுது புளியங்குடி!



சில ஆண்டுகளுக்கு முன்புவரை புளியங்குடி புழுதிபறக்கும் நகரமாக இருந்துவந்தது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியின் காரணமாக புளியங்குடி நகரத் தெருக்களெங்கும் பசுமையான மரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் குறைந்தது ஒரு மரம் என்கிற வகையில் புளியங்குடி, சிந்தாமணி என ஊரின் பல பகுதிகள் இப்போது பசுமையாய் இருக்கின்றன. பருவநிலை மாற்றத்துக்குக் காரணமா பூமி வெம்மையாதலை எதிர்கொள்வதற்கு நமது நகரம் தயாராகி விட்டது. இதில் தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு நாம் முன்னோடிதான். இதை மற்றவர்களுக்குப் பரப்புவதற்கும், பணியை எடுத்துச் செய்வதற்கும் உள்ளூர்க்காரர்களும், ஊர் கடந்து வாழ்வோரும், நாடு தாண்டி வாழ்வோரும் இன்னும் முயற்சிக்க வேண்டும்.




 

7 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம் ஐயா
புளியங்குடிக்கு என் ஆசிரியர் ஒருவரின் திருமணத்தின்பொருட்டு 19 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன்.அங்கு சில நாள் தங்கி மகிழ்ந்தேன்.மொந்தல் என்ற பகுதியில் இருந்த சுனையில் நீராடினேன்.அந்த ஊர் வளம் பற்றி வலைப்பூவில் கண்டு உள்ளம் மகிழ்கிறேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

goma said...

முதல்முறையாக உங்கள் வலிப்பூ விலாசத்தைப் தமயந்தி பின்னூட்டப் பெட்டியில் பார்த்தேன்.புளியங்குடி எனக்கு புகுந்த ஊர்.
அந்த ஊரின் பெருமை அறிய சந்தோஷம்

goma said...

புளியங்குடியின் சாலைகள் இன்னும் நல்ல முறையில் பராமரிக்கப் பட வேண்டிய நிலையில்தான் இருக்கின்றன.

ஊர் பெரியவர்கள் முனைந்தால் செய்ய முடியும்என்று நம்புகிறேன்

பின்னோக்கி said...

அருமையான முயற்சி. நல்ல பலன். வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி.

புளியங்குடி said...

goma...

உங்களது வருகைக்கு மிக்க நன்றி!
புளியங்குடியின் பெருமைகள் இன்னும் வரும்.

புளியங்குடி said...

பின்னோக்கி...

தங்களது பாராட்டுக்கு நன்றி!

Ponchandar said...

ஆஹா ! ! புளியங்குடியா இது...மழைக்காலத்தில் எடுத்த புகைப்படமா ? பசுமையா இருக்கு ! ! புளியங்குடி எனது சகலையோட ஊர்...அவங்க வீட்டுல 3 பேர் மருத்துவம் படிக்கிறாங்க ! ! கண்டுபிடிங்க பார்ப்போம்