Friday, November 27, 2009

எனது வலியும் தெரியாத வழியும்

இதன் தலைப்பு மட்டுமே கவிதைக்குரியது. மற்றபடி இது கவிதையல்ல. கவிதையின் வாசனையும் ருசியும் இல்லாத புலம்பல் இது. எங்கேயும் எழுத முடியாததால், இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.



எனது வலியும் தெரியாத வழியும்



முடியாதவைகளுக்காக மட்டும்
கடவுளை நினைப்பவன் நான்.

எந்த முகவரியும் எழுதாமல் ஒருநாள்
அவருக்குச் சம்மன் அனுப்பினேன்.

போனால் போகிறதென
நடுநிசிக் கனவில் வந்தார்.

எட்டடிக் கால்விரல் நகத்தைக்கூட
எட்டித்தான் பார்க்க முடிந்தது.

உயரமும் ஒளியும்
கடவுளென்பதைச் சொல்லின.

என்ன வரம் வேண்டுமென
வழக்கம் போலக் கேட்டார்.

ஒன்றல்ல சில வேண்டுமென
உரிமையோடு கேட்டேன்.

ஆகட்டும் பார்க்கலாம். ஆனாலும்
அளவோடு நிறுத்தி்க் கொள் என்றார்.

காதலியைத் தவிர
யாரையும் தெரியாது எனக்கு.

அவளின் அழகைக் கூட்ட
கூடை நிறைய நகைகள் கேட்டேன்.

இதோ தந்தேன்
அப்புறம் என்றார்.

என் வேர்களில் நீரூற்றிய
அவளுக்கு அரண்மனை வீடு.

அதோ வந்தது.
வேறென்ன என்றார்.

என்றும் மாறாத இளமை
அவளுக்கு மட்டும்.

சரி தரலாம்.
கடைசியாக என்ன வேண்டும்?

நான் காத்திருப்பதைச் சொல்லி
அவளைப் பூமிக்கு அனுப்பும்.

7 comments:

நசரேயன் said...

யாரு அது நாம் ஊரிலே ?

அத்திரி said...

கவிதை நல்லாயிருக்கு

//நசரேயன் said...
யாரு அது நாம் ஊரிலே ?//



புளியங்குடியில நீங்க மட்டும்தான் இருக்கனுமா அண்ணாச்சி

புளியங்குடி said...

புளியங்குடியிலே 27 ஆண்டுகள் பெஞ்சுகளைத் தேய்த்தவன். நாடார் பள்ளியும அதையொட்டிய வீடும் என்னை வளர்த்தன. 3 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து, பத்திரிகை ஒன்றில் அடைக்கலமாகியிருக்கிறேன்.


//அத்திரி said...

கவிதை நல்லாயிருக்கு//

மிகுந்த மகிழ்ச்சி. அப்படியானால் இன்னும் வரும்.

Anonymous said...

//நான் காத்திருப்பதைச் சொல்லி
அவளைப் பூமிக்கு அனுப்பும்.//

கடவுள் அனுப்பிய பார்சல் கிடைத்தாதா?

கேட்கச் சொன்னார். :)

Stay smile said...

nalla irukku annachi ....நான் காத்திருப்பதைச் சொல்லி
அவளைப் பூமிக்கு அனுப்பும்

priyamudanprabu said...

nice

Anonymous said...

nice very nice.............