புளியங்குடி மார்க்கெட் பாலத்தின் தாங்குதிறன் பற்றியும், அது உடைந்தால் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல் பற்றியும் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம அந்த எச்சரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது நிலைமை வெகு மோசமாகவே பாலம் இடிக்கப்பட்டது. ஆயினும் புதிய பாலம் துரித கதியில் கட்டப்பட்டது என்பதை மறுக்கவே முடியாது. ஏற்கெனவே, இருந்த பாலத்தைக் காட்டிலும் அகலமானதாக இருப்பதால், அந்த இடத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், பாலத்தின் உயரமும், ஓடையில் வெள்ள நீர் போவதற்கான பாதையும் குறைந்து போயிருப்பதால், பாலத்தின் வாழ்நாள் குறையக்கூடும என்ற ஐயம் எழுந்திருக்கிறது. எனினும், இந்தப் பாலம் இடிக்கப்பட்ட ஓரிரண்டு மாதங்களும் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்ட பணிகளில் அரசு நிர்வாகம் திறம்படவே செயலாற்றியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
மூன்று விதமான நிலைகளில் புளியங்குடி மார்க்கெட் பாலத்தின் உருவாக்கம்.
படங்கள்: அருண்குமார்
4 comments:
மரியாதைக்குரிய சகோதரரே!
நகரங்க்களுக்கு வந்து வசதிகள் பெருகியதும் சொந்த ஊர் பெயரையே சொல்ல வெட்கப்படும் இளையோர் மத்தியில்
நீங்கள் தனித்துவம் மிக்கவர். வாழ்க, வளர்க.
நிறைய எழுதுங்கள்
சாந்தி லெஷ்மன்
போர்ட் பிளேயர்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
அண்ணாச்சி நல்லா எழுதுறிங்க ,,, எனக்கு தேவிபட்டிணம் சொந்த ஊர் ...எனக்கு இந்த பாலத்தை பற்றியும்,, சிங்கிலிப்பட்டி புன்னையாபுரம் இடையில் உள்ள பாலத்தை கவலை இருந்தது இப்போது இரண்டும் தீர்ந்து விட்டது . ரொம்ப நன்றி அண்ணாச்சி புகைப்படம் போட்டதற்கு ... "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .... என் பெயர் மா.இராதா கிருஷ்ணன் .
palam nalla than irukku.aana periyavangala senthu antha odaikku ethvathu theervu kandu piducha nalla irukum,main roadla irukkura periya oda namma ooru alagaiye kedukkuthu
Post a Comment